பெண் சுதந்திரம் கவிதை

பெண்ணே...

நீ அனைத்து சுதந்திரங்களும் பெற்றவள் தான்
உன் பிறப்பிற்கு சுதந்திரம் உண்டு-ஆனால்
உன் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாதது

கல்வி சுதந்திரம் உண்டு
கற்க மட்டுமே உன்னிடம் உரிமை உள்ளது
கருத்தைப் பகிர அல்ல

பணிக்குச் செல்ல சுதந்திரம் உள்ளது-ஆனால்
செலவு செய்யும் உரிமை இல்லை

விரும்பியவரைக் கைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது
ஆணவ கொலைகளும் உள்ளன

நீ பூமியாய் நதியாய் போற்றப்படுவாய்
மற்றவர் விரும்பும் படி நீ வாழுகையில்

உனக்கு பறக்க சிறகுகள் தரப்படும்
கூண்டுகளோடு கூடிய சிறகுகள்

பல துறைகள் கற்பாய்
அனைத்தையும் சமையலறையில் செலவிட

அனைத்தையும் மீறி எழும் பெண்கள் பல
அவர்களில் வெற்றி காண்பவரோ சில

நீயோ!வானத்தில் தெரியும் நட்சத்திரம் போல்
அனைவரும் தொலைவில் நின்றே
உன்னைப் பார்க்கின்றனர்
அருகில் வரும் வேளையில் தெரியும்
நீ எவ்வளவு பெரிய சக்தி என்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி
கல்வி கற்க தகுதி இல்லாதவலாய் இருந்த
பெண்கள் என்பது அந்தக்காலம்
அண்டைவீட்டாரையும் நம்ப முடியாமல்
தொடுதல் முறைகளை கற்றுக் கொடுப்பது இந்தக்காலம்

அடிமைத்தனமும் மாறவில்லை
அடக்குமுறையும் மாறவில்லை

உண்மையில் நீ அடிமைபட்டுள்ள
களம்தான் மாறியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை