இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீறு கொண்டெழு மனமே! கவிதை

படம்
 வீறு கொண்டெழு மனமே!  நேற்றைய கவலையை எண்ணி இன்றைய அமைதியை இழந்து நாளைய வாழ்வைத் தொலைக்காமல் இருக்க வீறு கொண்டெழு மனமே! தோல்விக் கண்டு சலித்துக் கொள்ளாமல் வெறுமையை நினைக்காமல் வெற்றியை நெருங்க வீறு கொண்டெழு மனமே! நீ போகும் பாதை முட்களாகலாம் பழகும் சொந்தத்தால் சோகம் நேரலாம் தடைகளைத் தாண்டி தைரியமாக வாழ வீறு கொண்டெழு மனமே! உலகம் உன்னை கேலி பேசலாம் உழைக்கும் கரங்களில் வலிகள் கூடலாம்  ஊக்கம் கொண்டு நீ எழ வீறு கொண்டெழு மனமே! துயரம் கண்டு துவளாமல் துக்கம் என்று அஞ்சாமல் சாதிக்க துணிந்த மனிதனாய் வீறு கொண்டெழு மனமே! வெட்டிப் பேச்சைக்  கேளாமல் வீண் வேலை செய்யாமல் சரித்திரம் படைக்க வீறு கொண்டெழு மனமே! உன்னை புரிய நீ போதும் உன்னை அறிய  வெளி உலகம் வேண்டாம் உன்னுள் தேடு உண்மையைத் தெரிந்து கொள் வானம் உனக்கு வசப்படும் மனதிற்குள் குயிலிசைக்கும் ஆனந்தம் உன்னை வருட வாழ்க்கையை இன்னும் அழகாக்க வீறு கொண்டெழு மனமே! வீறு கொண்டெழு மனமே! வீறு கொண்டெழு மனமே!

இதோ ஓர் இனிய ஆண்டை நோக்கி

ஆண்டுகள் பல கழிந்தோடின.... அன்பாய் இருந்த சில காலங்கள் அழகாய் சேர்ந்த புது உறவுகள் இதழின் ஒரு ஓரத்தில்.... ஒரு புன்சிரிப்பில் சிற்பிக்குள் உள்ள முத்தாய்.... அனைவருக்கும் வாழ்த்து அன்னையின் அரவணைப்பில் இன்னும் நாட்கள் நீள தந்தை பாதுகாப்பில் நாட்கள் நகர சகோதரன் உடன் சண்டையிட சகோதரியிடம் வம்பிழுக்க தோழனாய் தோழியாய் எதிர்பார்ப்பின்றி சின்னஞ்சிறு கனவுகளுடன் இனிய ஆண்டை நோக்கி அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!