பெண்பாற் புலவர் எழுதிய புராணம் கூறும் பெண் வீரம்

ஒக்கூர் மாசாத்தியார் சங்க கால பெண் புலவர்களுள் ஒருவர் ஒக்கூர் மாசாத்தியார். இவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை எட்டு பாடல்கள். அவற்றுள் புகழ் வாய்ந்த புறம்பாடல் ஒன்றில் பெண்களின் வீரம் பற்றிக் கூறியுள்ளார். அனைவரையும் சிலிர்க்க வைக்கும் பாடல் அது. தமிழ்நாட்டு சிற்றூர் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சி . போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. காலை நேரம், ஊர் நடுவே போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்ட பெண் ஒருத்தி நாட்டுக் காவலுக்கு நம் தொண்டும் இருக்க வேண்டும் என எண்ணினாள். எண்ணியவள் ஏக்கம் கொண்டாள். காரணம், போருக்குச் செல்லத் தக்கப் பேராண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை. ஆனால் அவளுடன் பிறந்த அண்ணனும் இருந்தான். கணவனும் இருந்தான். ஆனால் போர் காலத்தில் அவளுடன் இருந்த அனைத்து ஆண்மக்களையும் இழந்தாள். அவர்கள் இறந்துவிட்டார்களே என்று அவள் கவலை கொள்ள...