பெண்பாற் புலவர் எழுதிய புராணம் கூறும் பெண் வீரம்
ஒக்கூர் மாசாத்தியார்
சங்க கால பெண் புலவர்களுள் ஒருவர் ஒக்கூர் மாசாத்தியார். இவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை எட்டு பாடல்கள். அவற்றுள் புகழ் வாய்ந்த புறம்பாடல் ஒன்றில் பெண்களின் வீரம் பற்றிக் கூறியுள்ளார். அனைவரையும் சிலிர்க்க வைக்கும் பாடல் அது.
தமிழ்நாட்டு சிற்றூர் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சி. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. காலை நேரம், ஊர் நடுவே போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்ட பெண் ஒருத்தி நாட்டுக் காவலுக்கு நம் தொண்டும் இருக்க வேண்டும் என எண்ணினாள்.
எண்ணியவள் ஏக்கம் கொண்டாள். காரணம், போருக்குச் செல்லத் தக்கப் பேராண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை.
ஆனால் அவளுடன் பிறந்த அண்ணனும் இருந்தான். கணவனும் இருந்தான். ஆனால் போர் காலத்தில் அவளுடன் இருந்த அனைத்து ஆண்மக்களையும் இழந்தாள்.
அவர்கள் இறந்துவிட்டார்களே என்று அவள் கவலை கொள்ளவில்லை. இன்று நடைபெறப் போகும் போருக்குத் தன்னால் ஒரு வீரனை அனுப்ப முடியவில்லையே என்றே அவள் வருந்தினாள்.
திடீரென அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. தெருக்கோடிக்கு விரைந்து ஓடினாள். அவளின் ஒரே புதல்வன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அவளைப் போருக்குத் தயார் செய்து அனுப்பினாள்.
அவன் அங்கு சென்றால் இறக்க நேரிடும் என தெரிந்தே தன் நாட்டிற்காக அனுப்பி வைத்தவள் அந்த வீரப்பெணி .
"கெடுக கிந்தை கடிதிவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே;
மேனாள் உற்ற செறுவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்தொழிந் தன்னே;
நெருநல் உற்ற செறுவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை பிலங்கி யாண்டுப் பட்டனனே;
இன்றும், செறுப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கை கொடுத்து வெளிது விரித்துடீ இப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோன்,
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே ". ( புறநானூறு).
கருத்துகள்
கருத்துரையிடுக