சூழ்நிலைக்கு இரையாகலாமா?

                    பூனையும் எலியும்


 

          ஒரு காட்டில் ஒரு பூனையும் எலியும் நண்பர்களாய் இருந்தன. இருவரும் தினமும் சந்தித்து பேசுவது வழக்கம். ஒருநாள் எலி பூனையைப் பார்க்க வந்தது. ஆனால் பூனையைக் காணவில்லை. எலி பூனையைத் தேட ஆரம்பித்தது. பூனை ஒரு வலையினுள் இருந்தது. அது வலையில் மாட்டி வெகுநேரமாய் ஆகியும் அதனால் தப்பிக்க முடியவில்லை பசியால் மிகவும் வாடியது. எலி அங்கு வந்ததும் பூனை எலியின் உதவியை நாடியது. அச்சமயம் எலி தன் குட்டியையும் உடன் கூட்டி வந்ததுள்ளது. எலி பூனைக்கு உதவ வலையைக் கடிக்க ஆரம்பித்தது. ஆனால் மெதுவாக கடித்துக் கொண்டு இருந்தது, அதைப் பார்த்த எலிக்குட்டியும் மெதுவாக வலையைக் கடித்தது. திடீரென்று வேடன் வந்தான், உடனே வேகமாக வலையைக் கிழித்து விட்டு, ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டது. வேடனைப் பார்த்த பூனை வேகமாக தப்பித்தது. அப்போது எலிக்குட்டி அதன் தாயிடன் கேட்டது " உங்களுக்குத் தான் வேகமாக வலையைப் பிரிக்கத் தெரியுமே, ஏன் அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் வேகமாக வலையைப் பிரித்து இருந்தாள், பூனை எங்கேயாவது போய் சாப்பிட்டு இருக்குமே?" என்றது எலிக்குட்டி. அதற்கு தாய் எலி கூறியது " பூனை வெகு நேரமாக வலையில் பசியோடு இருந்தது, நீயும் கொழு கொழு என இருக்கிறாய் " என்றது தாய் பூனை.

         " பாதிப்பான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவ எண்ணுவது தவறில்லை, ஆனால் அதற்காக நம்மை பனையம் வைப்பது தவறு " என்பதே இக்கதையின் வாயிலாக நாம்
அறியும்  செய்தி ஆகும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை