இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
பசி கவிதை
வாடிய வயிற்றின் குரல்... குடல்கள் கதறக் கண்கள் இருட்ட... செவிகளும் சத்தமிட்டது பசியில்... படைத்தவன் அலட்சியத்தால் பசியொடு நானிருக்க... மிச்ச மீதியையும் குப்பையில் எறிகிறது சமூகம்! குப்பையில் கிடக்கும் உணவை எண்ணி புன்னகிக்கிறது எங்கள் வயிறு! உழைக்க வயதில்லாத உருவத்தில் சிறியவரும் உழைத்து உழைத்து வாடிய வயதில் பெரியவரும் பிழைக்க வழியில்லாமல் பசியால் வாடுகின்றனர் சிலைக்கு உணவூட்டி மகிழும் சிந்தனை உலகத்தில் சிலரின் பசிக்கும் உணவளித்து அன்னத்தை வீணாக்காமல் அன்னதானம் ஆக்கலாம் பசியைத் தவிர்க்கலாம்.
பெண் சுதந்திரம் கவிதை
பெண்ணே... நீ அனைத்து சுதந்திரங்களும் பெற்றவள் தான் உன் பிறப்பிற்கு சுதந்திரம் உண்டு-ஆனால் உன் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாதது கல்வி சுதந்திரம் உண்டு கற்க மட்டுமே உன்னிடம் உரிமை உள்ளது கருத்தைப் பகிர அல்ல பணிக்குச் செல்ல சுதந்திரம் உள்ளது-ஆனால் செலவு செய்யும் உரிமை இல்லை விரும்பியவரைக் கைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது ஆணவ கொலைகளும் உள்ளன நீ பூமியாய் நதியாய் போற்றப்படுவாய் மற்றவர் விரும்பும் படி நீ வாழுகையில் உனக்கு பறக்க சிறகுகள் தரப்படும் கூண்டுகளோடு கூடிய சிறகுகள் பல துறைகள் கற்பாய் அனைத்தையும் சமையலறையில் செலவிட அனைத்தையும் மீறி எழும் பெண்கள் பல அவர்களில் வெற்றி காண்பவரோ சில நீயோ!வானத்தில் தெரியும் நட்சத்திரம் போல் அனைவரும் தொலைவில் நின்றே உன்னைப் பார்க்கின்றனர் அருகில் வரும் வேளையில் தெரியும் நீ எவ்வளவு பெரிய சக்தி என்று சின்னஞ்சிறு கதைகள் பேசி கல்வி கற்க தகுதி இல்லாதவலாய் இருந்த பெண்கள் என்பது அந்தக்காலம் அண்டைவீட்டாரையும் நம்ப முடியாமல் தொடுதல் முறைகளை கற்றுக் கொடுப்பது இந்தக்காலம் அடிமைத்தனமும் மாறவில்லை அடக்குமுறையும் மாறவில்லை உண்மையில்...
கருத்துகள்
கருத்துரையிடுக