வாடிய வயிற்றின் குரல்... குடல்கள் கதறக் கண்கள் இருட்ட... செவிகளும் சத்தமிட்டது பசியில்... படைத்தவன் அலட்சியத்தால் பசியொடு நானிருக்க... மிச்ச மீதியையும் குப்பையில் எறிகிறது சமூகம்! குப்பையில் கிடக்கும் உணவை எண்ணி புன்னகிக்கிறது எங்கள் வயிறு! உழைக்க வயதில்லாத உருவத்தில் சிறியவரும் உழைத்து உழைத்து வாடிய வயதில் பெரியவரும் பிழைக்க வழியில்லாமல் பசியால் வாடுகின்றனர் சிலைக்கு உணவூட்டி மகிழும் சிந்தனை உலகத்தில் சிலரின் பசிக்கும் உணவளித்து அன்னத்தை வீணாக்காமல் அன்னதானம் ஆக்கலாம் பசியைத் தவிர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக