வேதம் சொல்லும் காவேரித்தாய் வரலாறு

       
    காவேரா மன்னன் பிரம்மனை நோக்கி தவம் இருந்து முக்தி வேண்டினான்.அப்போது பிரம்மன் தோன்றி உயிர்களை படைப்பது மட்டுமே என் வேலை முக்தி அளிப்பது என்னால் இயலாது என்றார் , இருப்பினும் என்னால் ஒரு வரம் அளிக்க முடியும் அதனால் நீ கேட்டது உனக்கு கிடைக்கும் என்றார் பிரம்மர். அதற்கு காவகாவேரன் இணங்கவே ஒரு 5 வயது சிறுமி பிரம்மமானச புத்திரியை அளித்தார். இச்சிறுமி நீ கேட்ட வரத்தை உனக்கு தருவாள் என்று கூறி மறைந்தார். பின்னர் அச்சிறு குழந்தை மன்னனின் அரவணைப்பில் வளர்ந்தது. தன் 5 வயதிலேயே தலைக்காவேரி என்னும் இடத்தில் விஷ்ணுவை நினைத்து தவம் புரிந்து தன் பெபயரின் அர்த்தம் எனக்கு வேண்டும் என்றாள். காவேரியில் கா என்பதற்கு வினை தீர்ப்பவள் என்றும், வே என்பதற்கு வேண்டிய வரம் அளிப்பவள் என்றும், ரி என்பதற்கு முக்தி அளிப்பவள் என்றும் பொருள். அச்சிறு குழந்தை இந்த வரம் கேட்டதை எண்ணி திகைத்தார் விஷ்ணு. நீ கேட்ட வரம் உனக்கு கிட்டும். நீ லோபமுத்திரை என்னும் பெயர் கொண்டு அகத்தியரை மணந்த பின்னர் நீ கேட்ட வரம் உனக்கு கிட்டும் என்று கூறி மறைந்தார். பின் அவர் கூறியவாறே அகத்தியரை மணந்து தான் சிறுவயதில் தவம் செய்த இடத்தில் விஷ்ணுவின் அருளால் ஆறாகி அருள்புரிந்து வருகிறாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை