இடுகைகள்

Brother and sister love லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Brother and sister relationship quotes

படம்

வயலில் உலவும் எலி

படம்
வயலில் வாழும் கொழுத்த எலி பயிரைத் தின்னும் எலி சேமிக்கக் கற்றுக் கொடுத்த எலி நீண்ட மூக்குக் கொண்ட எலி மெது மெதுவாய் உடலை அசைத்து ஓடும் எலி குட்டி குட்டி கண்களால் மறைந்து ஓடும் எலி.

அழகிய முயல்குட்டி

படம்
அடர்ந்த காட்டுக்குள் அழகான நான்கு குட்டிக் கால்களும் இரண்டு கருமையான கண்களும் நீளமான இரண்டு குட்டிக் காதுகளும் கொண்ட குட்டி முயலை அழகான தாவல்களுடன் என்னை வந்து சேர்வாயா அல்லது என்னைக் கண்டு பயந்து ஓடுவாயா இனிமையான இயற்கை தந்த இறைவனின் அழகான படைப்பு நீ விரைவாக ஓடும் தன்மைக் கொண்ட வியப்பான படைப்பு நீ கவரும் கண்களைக் கொண்ட காந்த படைப்பு நீ உன்னைக் கண்ட என் கண்கள் கொள்ளும் ஆனந்தம் பல.

இரவு வணக்கம்🙏

படம்
பகலில் உழைத்து கலைத்தவர்கள் உறங்கும் நேரம் இன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சியான தருணத்திற்கு நன்றி செல்லும் நேரம் வருத்தமான நேரத்தை மறக்கும் நேரம் புதியதொரு நாளை வரவேற்க தயாராகும் நேரம் இன்றைய தவறைத் திருத்த கிடைத்த நன்நாளை எண்ணி அடுத்த நாள் பற்றிய பல கனவுகளுடன் உறங்கும் கண்கள் காணும் பல கனவுகளுடன்

சுவரோவியம்(wall painting)

படம்
உயிரற்ற சுவருக்கும் உயிரூட்டும் உயிரோவியம் மனதிற்கு இன்பம் தரும் மகிழோவியம் சுவருக்கு அழகூட்டும் அழகோவியம் வீட்டையையும் நாட்டையும் அழகு செய்யும் பேரோவியம்

நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவம்

படம்
நாடுகளுக்கு இடையே நட்பு வேண்டும்                      இதனால் போரைத் தடுக்கலாம் அமைதியை நிலைநாட்டலாம் நாடுகளுக்கு இடையே அன்பு வேண்டும்                       இதனால் நாடெங்கும் கருணை மற்றும் இரக்கத்தைப் பரப்பலாம் நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் நம் உறவினர்களே அனைவரும் நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களே இப்போது தான் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன இதற்கு முன் நம் முன்னோர்கள்அனைவரும் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் தானே அப்போது அனைவரும் நம் உறவினர்கள் தானே பின்னர் ஏன் இந்த பிரிவினை? எதற்காக இந்த போர்? மக்களைக் காக்கவா காப்பதற்காக தான் என்றால் அனைவரும் போரின்றி வாழ்ந்தாலே போதுமே மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் உலகமெங்கும் சகோதரத்துவம் பரப்பி போர் அகற்றி மனிதநேயம் காப்போம்.

விநாயகர் சதுர்த்தி

படம்
முழு முதற்கடவுளின் திருநாள் ஊரெங்கும் மகிழ்ச்சி பெருகும் பெருநாள் உல்லாசம் ஊற்றெடுக்கும் தமிழ் நாள் சிலைகள் பெருகும் அந்நாள் ஆற்றில் கரையும் திருநாள் முன்னோர் உருவாக்கிய பெருநாள் நிலத்தடி நீரைப் பெருக்கும் அற்புத நாள் ஆடிப்பெருக்கில் அரிக்கப்பட்ட மணலை ஆவணியில் சரிசெய்ய பிறந்த அறிவியல் நாள் இத்துணை சிறப்பு வாய்ந்த நன்நாள் அந்நாள் நம் முழுமுதற் கடவுளின் விநாயகர் சதுர்த்தி.

தமிழின் சிறப்பு கவிதை

படம்
சங்க இலக்கியத்தால் இலக்கியம் புகட்டி தொல்காப்பியம் வாயிலாக இலக்கணம் கூறி புறநானூறின் மூலம் தமிழர் வரலாற்றை உணர்த்தி அகநானூறில் அகப்பொருள் சொல்லி நாலடியார் மூலம் வேளாண்மை கற்றுக் கொடுத்து சிலப்பதிகாரத்தில் வாய்மை உணர்த்தி மகாபாரதம் மூலம் போர் கூறி கலிங்கத்துப்பரணியினால் வீரம் சொல்லி பக்தி இலக்கியம் மூலம் மனஅமைதி தந்து தூது மூலம் காதல் சொல்லி திருக்குறள் வாயிலாக வாழ்வியல் நெறி ஊட்டி பழமொழியில் பாடம் புகட்டும் படிக்க படிக்க சலிக்காத புதுமை தரும் என் தமிழ் மொழி.

கைவிடப்படும் குழந்தைகள்

படம்
காதலின் அர்த்தம் புரியாமல் காதலின் பெயரால் தவறு செய்து பின் தவறைத் திருத்தி அவரவர் வாழ்க்கை புரிந்து பிரிகிறார்கள் காதலர்கள் அந்த தவறின் விளைவாய் வரும் குழந்தையின் நிலையோ கைவிடப்பட்ட குழந்தை அவர்களுக்கு இந்த சமுதாயம் வைக்கும் பெயர் அநாதை! தாய் தந்தை அரவணைப்பில் கஷ்டம் தெரியாமல் வாழும் சில ஜீவன்கள் செய்யும் தவறு ஒன்றும் அறியாத அப்பச்சிளங்குழந்தையை அநாதை ஆக்குகிறது ஆண்பிள்ளைப் பெறும் ஆர்வத்தில் பெண்பிள்ளைகளின் பெருமை அறியாமல் அவர்களைச் சாக்கடையில் தூக்கி எறிகிறது இச்சமூகம் பெண்ணுயிர் இல்லாமல் ஆணுயிர்  இல்லை என்பது புரியாமல் பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்காக என்றும் குழந்தைகளைத் தண்டிக்காதீர்! அடுத்த தலைமுறையை அநாதை ஆக்காதீர்!

தூய்மை நம் கடமை

படம்
நிலத்தின் தூய்மை மண்ணைக் காக்கும் மண்ணின் தூய்மை மனிதனைக் காக்கும் நீரின் தூய்மை தாகம் தீர்க்கும் காற்றின் தூய்மை சுவாசம் தரும் ஆகாயத்தின் தூய்மை மேகமாகும் மேகத்தின் தூய்மை மழையாய் பொழிகிறது மழை நமக்கு உணவாகிறது குடிநீராக உள்ளது ஐம்பூதங்களும் தூய்மையாக தான் உள்ளது அவை உழைப்பது நமக்காக - ஆனால் நாம் தான் அவற்றை அசுத்தம் செய்கிறோம் சுத்தம் செய்வதே நம் கடமை அசுத்தம் செய்வதல்ல நம்மைக் காக்கும் கடமையைச் சரியாக செய்கிறது இயற்கை - ஆனால் நமக்கான நம் கடமையை மறக்கிறோம் தூய்மை நமக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது தூய்மையைக் கடைப்பிடித்து இனிமையாய் வாழ்வோம்.

மனித உழைப்பு(அந்தக் காலம்) இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)

படம்
கடின உழைப்பால் வெற்றி அடைய                       நினைப்பது         மனித உழைப்பு(அந்தக்காலம்) இயந்திர உழைப்பால் சிரமமில்லாமல்     வெற்றி அடைய நினைப்பது          இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) தன்னை நம்பி தன் மேல் நம்பிக்கைக்                         கொண்டது        மனித உழைப்பு(அந்தக்காலம்) தான் உருவாக்கிய இயந்திரத்தை              மட்டும் நம்புவது        இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) இயற்கையை நாடி இயற்கையை                         இரசித்தது         மனித உழைப்பு(அந்தக்காலம்) செயற்கையைத் தேடி உழைப்பைத்                        தொலைத்தது          இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம...

வேடிக்கை உலகம்

படம்
தன் நிலையை உயர்த்தாமல் பிறர்     முன்னேற்றத்தை எண்ணி   வருந்துகிறான் உயர்வுப் பெற உழைப்பை நம்பாமல்   குறுக்குவழி தேடுகிறான் தன் குறைகளை சரி செய்யாமல்    பிறர் குறைகளுக்கு மட்டும் செவி           சாய்க்கிறான் தன் முன் இருக்கும் குப்பையைக் கூட    எடுக்காதவன் தூய்மைப் பற்றிப்    பேசுகிறான் உடல் குறைபாடு உள்ளவரை ஊனம்    என்று மனதில் குறை வைத்து    ஊனமாய் அலைகிறான் தவறைக் குறைக்கக் கடவுளை       உருவாக்கியவன் இப்போது கடவுளின்  பெயரால் தவறு செய்கிறான் பெண்ணைக் காக்க வேண்டிய ஆணே      அவளை அழிக்கிறான் குழந்தையைக் காக்க வேண்டிய தாயே      தன் பிள்ளைகளை அழிக்கிறாள் அன்பும் பாசமும் பாராட்டாமல்       பணத்தையும் ஊழலையும்   பேசி தன்னால் தன்னையே அழித்துக் கொள்ளும்     வேடிக்கை உலகமடா இது!

ஆசிரியர் தினம்

படம்
கல்விக் கற்பித்தவர் ஒழுக்கம் கற்பித்தவர் நல்வழி காட்டியவர் அன்னையாய் அன்புக் காட்டியவர் தந்தையாய் அறிவுப் புகட்டியவர் கலையைக் கற்பித்து கலைஞர் ஆக்கியவர் அறிவியல் கற்பித்து அறிவியலாளன் ஆக்கியவர் எழுதக் கற்றுக் கொடுத்து எழுத்தாளன் ஆக்கியவர் படிக்கக் கற்றுக் கொடுத்து படிப்பாளி ஆக்கியவர் பிழைப்பின்றிப் பேசக் கற்றுக் கொடுத்து பேச்சாளன் ஆக்கியவர் தன் பிள்ளை என்று உச்சி முகர்ந்து பாராட்டுபவர் இத்தனை ஆக்கும் பண்புடையவரான ஆசிரியருக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

போரில்லா போட்டியில்லா அமைதியான பூமி

படம்
மனிதனுக்குக் கிடைத்த பரிசு அமைதியான வாழ்க்கை-ஆனால் இங்கு போட்டியும் பொறாமையையும் மட்டுமே உள்ளது போட்டியின் முடிவு பொறாமையில் முடிகிறது பொறாமை வன்மத்திற்கு வழிவகுக்கிறது வன்மம் போரை உருவாக்குகிறது போரினால் மக்களின் அமைதி அழிக்கப்படுகிறது அமைதியைக் கொடுக்காமல் வருத்தத்தை மட்டும் தரும் போர் எதற்கு? ஒரு மனிதனைக் காக்க மற்றொரு மனிதனைக் கொல்வதா? ஒரு நாட்டைக் காக்கும் கருவி மற்றொரு நாட்டை அழிப்பதா? இதன் பெயர் மனிதமா? போரினால் என்னப் பயன் யாருக்குப் பயன் போரினால் உண்டாவது அழிவு மட்டுமே அனைவரும் மனிதர்கள் தானே அனைவருக்கும் இன்பமும் உண்டு துன்பமும் உண்டு-ஆகவே ஆயுதத்தைப் பகிராமல் அனைத்து இடங்களிலும் அன்பைப் பகிர்ந்து அமைதியான பூமியை உருவாக்குவோம்.

சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முத்தமிழ் காப்பியம், முத்தமிழ் நாடுகளின் நாடகமாக காட்டிய காப்பியம். சிலப்பதிகாரம் தோன்றிய காலம் கி.பி.2ம் நூற்றாண்டு. தெய்வங்களையும் அரசர்களையும் தலைவராகப் பாடப்பட்ட காலத்தில் சாதாரண மக்கள் பற்றிய வாழ்க்கையை உணர்த்திய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதனால் தான் அதை குடிமக்கள் காப்பியம் என்றுக் கூறினர். சிலப்பதிகாரம் 3 காண்டங்கள் மற்றும் 30 காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் 10 காதைகளையும், மதுரைக்காண்டம் 13 காதைகளையும், வஞ்சிக்காண்டம் 7 காதைகளையும் உடையது. காதை           காதை என்னும் தலைப்பில் உள்ளவை 22. வரி என்ற தலைப்பில் 2ம், பாாடல் என்ற தலைப்பில் 1  ஆக முப்பது. சிலம்பு         ஒலி, மகளிர் காலணி வகைை, பூசாாரிகளின் கைச் சிலம்பு, மலைை, பக்கமலை, குகை  போன்ற பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகின்றன.        சிலம்பு என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காலணி என்ற பொருளில் 41 இடங்களிலும் மலை என்ற பொருளில் 3 இடங்களிலும் பயன் பெற்றுள்ளது. கண்ணகி     ...

பெண் கவிதை

படம்
பெண்ணிற்கு வீரம் வேண்டும் தன்னை இழிவுபடுத்துபவரைத் திரும்பி பார்க்க வைக்க பொறுமை வேண்டும் தன்னை மதிப்பவர் வாய்மொழி கேட்க அடக்கம் வேண்டும் தன்னை சுதந்திரமாய் இருக்க செய்பவரிடம் அடங்கி இருக்க அமைதி வேண்டும் தனது இலட்சியத்தில் தெளிவடைய அன்பு வேண்டும் தாய் என்ற தகுதி அடைய உறுதி வேண்டும் கற்பு என்பது ஆணிற்கும் உண்டு என்பதை நிரூபிக்க தன்னம்பிக்கை வேண்டும் பல தடைகளைத் தாண்டி சாதனை படைக்க இந்த அனைத்து குணங்களும் உடையவள் பெண் அதனால் தான் தாய் என்னும் சொல் அனைவரையும் மதிக்க வைக்கிறது.

சந்தோஷம் கவிதை

படம்
வாழ்க்கையின் வரம் சந்தோஷம் மனிதனின் பலம் சந்தோஷம் மனநிறைவால் வருவது சந்தோஷம் மன அமைதிக்கு வித்திடுவது சந்தோஷம் அறுவடையில் உழவனின் சந்தோஷம் குழந்தைகள் தாயின் சந்தோஷம் கூடி வாழ்தல் அனைவரின் சந்தோஷம் சுப நிகழ்ச்சிகள் விருந்தினர் சந்தோஷம் சந்திரன் வருகை இரவின் சந்தோஷம் சூரியன் வருகை பகலின் சந்தோஷம் தர்மனுக்கு உண்மையில் சந்தோஷம் சந்தோஷம் தான் வாழ்வின் நிம்மதி துன்பத்தில் இன்பம் காண்பது சந்தோஷம் சந்தோஷத்தில் இன்பம் காண்பதும் சந்தோஷம்.

இலட்சியம் கவிதை

இலட்சியம் இல்லா வாழ்வு கூடில்லா பறவை போன்றது வேரில்லா மரம் போன்றது குறிக்கோளற்ற எண்ணமும் செயலும் என்றும் நன்மை பயப்பதில்லை இலட்சியம் என்றும் உண்மைக்கும் நேர்மைக்கும் பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது இலட்சியத்தை அலட்சியம் ஆக்காமல் வாழ்வில் ஒரு இலட்சியம் வைத்து சிகரம் தொடுவோம்.

இறைவன்

படம்
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் மனிதர்களின் மனதில் இறைவன் பலவிதம் சிலரின் நினைவில் இறைவன் ஒளி பொருந்தியவன் சிலர் எண்ணத்தில் இறைவன் ஒலி பொருந்தியவன் சிலர் நினைவில் இறைவன் உருவம் உடையவன் ஆன்மீகவாதியின் மனதில் இறைவன் வாழ்கிறான் நாத்திகவாதியின் புத்தியில் இறைவன் வாழ்கிறான் ஆன்மிகம் உள்ளதால் தான் நாத்திகம் உள்ளது-ஏனெனில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்க தானே செய்கிறது.

வரதட்சணை

படம்
மண் நம்மைத் தாங்க நாம் தரவில்லை வரதட்சணை காற்றை சுவாசிக்க நாம் தரவில்லை வரதட்சணை நீர் உன் தாகம் தீர்ப்பதற்காக நாம் தரவில்லை வரதட்சணை ஒளி தரும் சூரியனுக்கு நாம் தரவில்லை வரதட்சணை இதம் தரும் நிலவிற்கு நாம் தரவில்லை வரதட்சணை உணவு தரும் உழவிற்கு நாம் தரவில்லை வரதட்சணை பசுமை தரும் இயற்கைக்கு நாம் தரவில்லை வரதட்சணை எதற்கும் நாம் விலைகொடுக்க முடியாது அதுபோல தான் மனைவி தரும் அன்பும் விலைமதிப்பற்றது அவளிடம் அன்பை வரதட்சணையாக கேட்க பணத்தையும் நகையையும் சில உயிரற்ற பொருள்களையும் அல்ல.