தூய்மை நம் கடமை

நிலத்தின் தூய்மை மண்ணைக் காக்கும்
மண்ணின் தூய்மை மனிதனைக் காக்கும்
நீரின் தூய்மை தாகம் தீர்க்கும்
காற்றின் தூய்மை சுவாசம் தரும்
ஆகாயத்தின் தூய்மை மேகமாகும்
மேகத்தின் தூய்மை மழையாய் பொழிகிறது
மழை நமக்கு உணவாகிறது
குடிநீராக உள்ளது
ஐம்பூதங்களும் தூய்மையாக தான் உள்ளது
அவை உழைப்பது நமக்காக - ஆனால்
நாம் தான் அவற்றை அசுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்வதே நம் கடமை
அசுத்தம் செய்வதல்ல
நம்மைக் காக்கும் கடமையைச் சரியாக
செய்கிறது இயற்கை - ஆனால்
நமக்கான நம் கடமையை மறக்கிறோம்
தூய்மை நமக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது
தூய்மையைக் கடைப்பிடித்து
இனிமையாய் வாழ்வோம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை