மனித உழைப்பு(அந்தக் காலம்) இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)


கடின உழைப்பால் வெற்றி அடைய
                      நினைப்பது
        மனித உழைப்பு(அந்தக்காலம்)
இயந்திர உழைப்பால் சிரமமில்லாமல்
    வெற்றி அடைய நினைப்பது
         இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)
தன்னை நம்பி தன் மேல் நம்பிக்கைக்
                        கொண்டது
       மனித உழைப்பு(அந்தக்காலம்)
தான் உருவாக்கிய இயந்திரத்தை
             மட்டும் நம்புவது
       இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)
இயற்கையை நாடி இயற்கையை
                        இரசித்தது
        மனித உழைப்பு(அந்தக்காலம்)
செயற்கையைத் தேடி உழைப்பைத்
                       தொலைத்தது
         இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)
துன்பம் பல தந்து வெற்றியினால்
                   இன்பக்கனி தருவது
         மனித உழைப்பு(அந்தக்காலம்)
போலி இன்பம் மட்டும் தந்து
            சோம்பேறியாக்கியது
       இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)
கடின உழைப்பால் ஆரோக்கியம் தந்தது
       மனித உழைப்பு(அந்தக்காலம்)
சுலபத்தால் சோம்பேறியாகி     ஆரோக்கியம் குறைந்தது
        இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)
மனித உழைப்பால் உயர்ந்த இயந்திர
                       வளர்ச்சி
மனிதனைக் காக்கப் பயன்படாமல்
மனிதனை அழிப்பது ஏனோ?
மனித உழைப்பை உதாசீனப்படுத்துவது
ஏனோ?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை