ஐம்பெருங்காப்பியங்களின் கதைச்சுருக்கம்

சிலப்பதிகாரம்
     * புகார்க்காண்டம் - 10 காதைகள்
     * மதுரைக்காண்டம் - 13 காதைகள்
     * வஞ்சிக்காண்டம் - 7 காதைகள்
   மூவேந்தர்களின் நாடுகளையும் மூவேந்தர்களின் சிறப்புகளையும் ஏற்றத்தாழ்வின்றி சிறப்பிக்கப்படும் காப்பியம். சோழ நாட்டு புகாரில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டு வஞ்சி மாநகரில் கணவனுடன் இணைந்து வானவர் தொழுதேத்தும் மதுரையில் கணவனைப் பறிகொடுத்து பத்தினி தெய்வமாக மாறுகிறாள்.
மணிமேகலை
     மணிமேகலை 30 காதைகளைக் கொண்டு உள்ளது. இக்காப்பியத்தை மணிமேகலை துறவு,அறகாப்பியம் என்றும் அழைப்பர். சிறைசீீீர்த்திருத்தம்,பறந்தமை ஒழிப்பு,பசிப்பிணிஅகற்றல், உடல் ஊனமுற்றவருக்கு உதவுதல், மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு என சமுதாய சீர்த்திருத்த காப்பியமாக விளங்குகிறது.
     சோழ நாட்டின் இளவரசன் உதய குமரன் மணிமேகலையை விரும்புகிறான். தீபத்திலகை தெய்வத்திடம் அட்சயப்பாத்திரம் எனும் அமுத சுரபியை மணிமேகலை பெறுகிறாள். பூம்புகார் நகர மக்களுக்கு உணவளித்தாள்.
       மணிமேகலையை உதயகுமரன் பின் தொடர காய சண்டிகை வடிவில் மணிமேகலை தொண்டு செய்தாள். இதனை அறிந்த உதயகுமரன் மீண்டும் தொடர்ந்தான். காய சண்டிகையை தேடி வந்த கணவன் காஞ்சனன் உதயகுமரனை வெட்டி கொலை செய்கிறான். மகனின் இறப்பிற்குக் காரணமான மணிமேகலையை இராசமாதேவி சிறை படுத்துகிறாள். அவள் செய்த பல துன்பங்களில் இருந்து மீண்டு வருகிறாள். மணிமேகலை இறுதியில் அரசி தன் தவறை உணர்ந்து மனம் மாறுகிறாள்.
சீவகசிந்தாமணி
       காப்பிய தலைவன் சீீீவகனின் தந்தை ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சச்சந்தன் ஆண்டு வந்தான். மனைவி மீது மிகுந்த காதல் கொண்டதால் ஆட்சிப் பொறுப்பை அமைச்சர் கட்டியங்காரனிடம் ஒப்படைத்து இருந்தான். வஞ்சகம் கொண்ட அமைச்சர் போர் செய்து மன்னனை வீீழ்த்துகிறான். போரிடும் முன்னே மனைவியை மயிற்பொறியில் அனுப்பி விடுகிறான். மயிற்பொறி இடுகாட்டில் இறங்குகிறது. அங்கு சீவகன் பிறக்கிறான். கந்துக்கடன் என்பவர் சீவகனை வளர்க்கிறார். சீீவகன் அச்சணந்தி என்ற ஆசிரியரிடம் கல்வி மற்றும் பல கலைகளைக் கற்று எண்மறை மணக்கிறான். இறுதியில் தன் தந்தையின் நாட்டை மீட்டெடுத்து அரச வாழ்வை துறந்து துறவி ஆகிறான்.
வளையாபதி
     நவக்கோடி நாராயணன் என்ற வைசியன் பிறக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணக்கிறான். அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அவனை வெறுக்கின்றனர். எனவே அவன் அயல் நாடு செல்கிறான். அப்பெண்ணிற்கு பிறந்த மகன் தன் தந்தையைத் தேடிக் கண்டுபிடித்து தன் தாயிடம் சேர்த்து வைக்கிறான்.
குண்டலகேசி
    இராசகிருக நாட்டு மந்திரியின் மகள் பத்திரை. இவள் கொலை தண்டனைப் பெற்ற திருடன் காளன் என்பவனை காதலித்தாள். தந்தையின் உதவியால் அவனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு நாள் ஊடல் காரணமாக கணவனைக் கள்வன் என கூறுகிறாள். கோபம் அடைந்தவன் அவளை மலை உச்சிக்கு அழைத்து சென்று உன்னைக் கொலை செய்ய போகிறேன் என்கிறான். தற்கொல்லியை முற்கொள்க என்பதை உணர்ந்தவள். அவனை வலம் வருவதாகக் கூறி அவனைத் தள்ளி விடுகிறாள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை