அழகிய முயல்குட்டி

அடர்ந்த காட்டுக்குள் அழகான நான்கு குட்டிக் கால்களும் இரண்டு கருமையான
கண்களும் நீளமான இரண்டு குட்டிக் காதுகளும் கொண்ட குட்டி முயலை
அழகான தாவல்களுடன்
என்னை வந்து சேர்வாயா அல்லது
என்னைக் கண்டு பயந்து ஓடுவாயா
இனிமையான இயற்கை தந்த
இறைவனின் அழகான படைப்பு நீ
விரைவாக ஓடும் தன்மைக் கொண்ட
வியப்பான படைப்பு நீ
கவரும் கண்களைக் கொண்ட
காந்த படைப்பு நீ
உன்னைக் கண்ட என் கண்கள்
கொள்ளும் ஆனந்தம் பல.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை