வேடிக்கை உலகம்


தன் நிலையை உயர்த்தாமல் பிறர்     முன்னேற்றத்தை எண்ணி   வருந்துகிறான்

உயர்வுப் பெற உழைப்பை நம்பாமல்
  குறுக்குவழி தேடுகிறான்

தன் குறைகளை சரி செய்யாமல்
   பிறர் குறைகளுக்கு மட்டும் செவி           சாய்க்கிறான்

தன் முன் இருக்கும் குப்பையைக் கூட
   எடுக்காதவன் தூய்மைப் பற்றிப்
   பேசுகிறான்

உடல் குறைபாடு உள்ளவரை ஊனம்
   என்று மனதில் குறை வைத்து
   ஊனமாய் அலைகிறான்

தவறைக் குறைக்கக் கடவுளை       உருவாக்கியவன் இப்போது கடவுளின்
 பெயரால் தவறு செய்கிறான்

பெண்ணைக் காக்க வேண்டிய ஆணே
     அவளை அழிக்கிறான்

குழந்தையைக் காக்க வேண்டிய தாயே
     தன் பிள்ளைகளை அழிக்கிறாள்

அன்பும் பாசமும் பாராட்டாமல்
      பணத்தையும் ஊழலையும்   பேசி
தன்னால் தன்னையே அழித்துக் கொள்ளும்

    வேடிக்கை உலகமடா இது!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை