கைவிடப்படும் குழந்தைகள்

காதலின் அர்த்தம் புரியாமல்
காதலின் பெயரால்
தவறு செய்து பின் தவறைத் திருத்தி
அவரவர் வாழ்க்கை புரிந்து பிரிகிறார்கள் காதலர்கள்
அந்த தவறின் விளைவாய் வரும்
குழந்தையின் நிலையோ
கைவிடப்பட்ட குழந்தை
அவர்களுக்கு இந்த சமுதாயம் வைக்கும்
பெயர்
அநாதை!
தாய் தந்தை அரவணைப்பில்
கஷ்டம் தெரியாமல்
வாழும் சில ஜீவன்கள் செய்யும் தவறு
ஒன்றும் அறியாத அப்பச்சிளங்குழந்தையை
அநாதை ஆக்குகிறது
ஆண்பிள்ளைப் பெறும் ஆர்வத்தில்
பெண்பிள்ளைகளின் பெருமை அறியாமல்
அவர்களைச் சாக்கடையில் தூக்கி எறிகிறது இச்சமூகம்
பெண்ணுயிர் இல்லாமல் ஆணுயிர்  இல்லை என்பது புரியாமல்
பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்காக
என்றும் குழந்தைகளைத் தண்டிக்காதீர்!
அடுத்த தலைமுறையை அநாதை ஆக்காதீர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை