பெண் கவிதை

பெண்ணிற்கு வீரம் வேண்டும்
தன்னை இழிவுபடுத்துபவரைத் திரும்பி பார்க்க வைக்க
பொறுமை வேண்டும்
தன்னை மதிப்பவர் வாய்மொழி கேட்க
அடக்கம் வேண்டும்
தன்னை சுதந்திரமாய் இருக்க செய்பவரிடம் அடங்கி இருக்க
அமைதி வேண்டும்
தனது இலட்சியத்தில் தெளிவடைய
அன்பு வேண்டும்
தாய் என்ற தகுதி அடைய
உறுதி வேண்டும்
கற்பு என்பது ஆணிற்கும் உண்டு என்பதை நிரூபிக்க
தன்னம்பிக்கை வேண்டும்
பல தடைகளைத் தாண்டி சாதனை படைக்க
இந்த அனைத்து குணங்களும் உடையவள் பெண்
அதனால் தான் தாய் என்னும் சொல் அனைவரையும் மதிக்க வைக்கிறது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை