தமிழின் சிறப்பு கவிதை

சங்க இலக்கியத்தால் இலக்கியம் புகட்டி
தொல்காப்பியம் வாயிலாக இலக்கணம் கூறி
புறநானூறின் மூலம் தமிழர் வரலாற்றை
உணர்த்தி
அகநானூறில் அகப்பொருள் சொல்லி
நாலடியார் மூலம் வேளாண்மை கற்றுக் கொடுத்து
சிலப்பதிகாரத்தில் வாய்மை உணர்த்தி
மகாபாரதம் மூலம் போர் கூறி
கலிங்கத்துப்பரணியினால் வீரம் சொல்லி
பக்தி இலக்கியம் மூலம் மனஅமைதி தந்து
தூது மூலம் காதல் சொல்லி
திருக்குறள் வாயிலாக வாழ்வியல் நெறி ஊட்டி
பழமொழியில் பாடம் புகட்டும்
படிக்க படிக்க சலிக்காத புதுமை தரும்
என் தமிழ் மொழி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை