போரில்லா போட்டியில்லா அமைதியான பூமி
இங்கு போட்டியும் பொறாமையையும் மட்டுமே உள்ளது
போட்டியின் முடிவு பொறாமையில் முடிகிறது
பொறாமை வன்மத்திற்கு வழிவகுக்கிறது
வன்மம் போரை உருவாக்குகிறது
போரினால் மக்களின் அமைதி அழிக்கப்படுகிறது
அமைதியைக் கொடுக்காமல் வருத்தத்தை மட்டும் தரும் போர் எதற்கு?
ஒரு மனிதனைக் காக்க மற்றொரு மனிதனைக் கொல்வதா?
ஒரு நாட்டைக் காக்கும் கருவி மற்றொரு நாட்டை அழிப்பதா?
இதன் பெயர் மனிதமா?
போரினால் என்னப் பயன் யாருக்குப் பயன்
போரினால் உண்டாவது அழிவு மட்டுமே
அனைவரும் மனிதர்கள் தானே
அனைவருக்கும் இன்பமும் உண்டு துன்பமும் உண்டு-ஆகவே
ஆயுதத்தைப் பகிராமல்
அனைத்து இடங்களிலும் அன்பைப் பகிர்ந்து
அமைதியான பூமியை உருவாக்குவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக