நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவம்

நாடுகளுக்கு இடையே நட்பு வேண்டும்
                     இதனால்
போரைத் தடுக்கலாம் அமைதியை நிலைநாட்டலாம்
நாடுகளுக்கு இடையே அன்பு வேண்டும்
                      இதனால்
நாடெங்கும் கருணை மற்றும் இரக்கத்தைப் பரப்பலாம்
நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல
அனைத்து மக்களும் நம் உறவினர்களே
அனைவரும் நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களே
இப்போது தான் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன
இதற்கு முன் நம் முன்னோர்கள்அனைவரும் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் தானே
அப்போது அனைவரும் நம் உறவினர்கள் தானே
பின்னர் ஏன் இந்த பிரிவினை?
எதற்காக இந்த போர்?
மக்களைக் காக்கவா
காப்பதற்காக தான் என்றால்
அனைவரும் போரின்றி வாழ்ந்தாலே போதுமே
மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்
உலகமெங்கும் சகோதரத்துவம் பரப்பி
போர் அகற்றி
மனிதநேயம் காப்போம்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை