இறைவன்

இறைவன்
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
மனிதர்களின் மனதில் இறைவன் பலவிதம்
சிலரின் நினைவில்
இறைவன் ஒளி பொருந்தியவன்
சிலர் எண்ணத்தில்
இறைவன் ஒலி பொருந்தியவன்
சிலர் நினைவில்
இறைவன் உருவம் உடையவன்
ஆன்மீகவாதியின் மனதில்
இறைவன் வாழ்கிறான்
நாத்திகவாதியின் புத்தியில்
இறைவன் வாழ்கிறான்
ஆன்மிகம் உள்ளதால் தான்
நாத்திகம் உள்ளது-ஏனெனில்
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை இருக்க தானே செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை