என் இனிய தோழி

என் தோழியே என் ஆசிரியையுமானால்!
அன்பைக் கற்றுக் கொடுத்தாள்
அவளின் அடிமையானேன்
அறநெறியைக் கற்றுக் கொடுத்தாள்
அவளின் நேசம் புரிந்தேன்
படிக்கக் கற்றுக் கொடுத்தாள்
அவளின் சீடனானேன்
மாரியாதைக் கற்றுக் கொடுத்தாள்
அவளின் மாணவனானேன்
தாயின் அன்பைக் கொடுத்தாள்
தாய்ப்பாசம் உணர்ந்தேன்
என் வேலையையும் அவள் செய்து
எனக்கு வேலை கற்றுக்கொடுத்தாள்
அவளின் வெண்மனம் புரிந்தேன்
என்னை இன்னொரு தந்தை என்றாள்
என் மகளாய் உணர்ந்தேன்
சண்டைப் போட கற்றுக் கொடுத்தாள்
என் சகோதரியும் அவளென அறிந்தேன்
மாதா பிதா குரு என்பார்கள்
இம்மூன்றையும் உன்னில் கண்டேன்
உன்னதமான உன் அன்பில்
உன்னோடு நான் கழித்த நாள்கள்
நீங்கா நினைவுகளுடன் என்றும் என் மனதில்
என் இனிய தோழியே!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை