கல்லூரி கவிதை

மாணவனாய் மட்டும் இருந்த என்னை மனிதனாக்கிய இடம்
வாழ்க்கையின் அர்தத்தைக் கற்றுத் தந்த இடம்
போட்டிகளின் பங்களிப்பையும்
வெற்றியின் உற்சாகத்தையும்
தோல்வியின் அனுபவத்தையும்
கற்றுத் தந்த இடம்
வானவில்லின் வண்ணம் போல்
வாழ்வை இனிமையாக்கிய இடம்
நட்பின் சிறப்பையும்
ஆசிரியர்களின் சிறப்பையும்
உணர்ந்த இடம்
வண்ணத்துப்பூச்சி போல்-என்னைப்
பல வண்ணங்களால் அலங்கரித்த இடம்
ஒற்றுமையின் அர்த்தத்தை உணர்த்திய இடம்
தோழமை பாராட்டிய இடம்
தோள் கொடுக்கும் தோழனோடு சுற்றிய இடம்
கோபம் மறந்த இடம்
சோகம் தொலைத்த இடம்
சிநேகம் வளர்த்த இடம்
பொறாமை இல்லாத இடம்
சாதி இல்லாத இடம்.
              என் கல்லூரி காலம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை