கந்தர்வன் கவிதைகள்
கந்தர்வன் கவிதைகள்:
குடைகள்:
வெண் கொற்றக் குடைநிழலில்
ரோஜாச் செடிகள்
வெயிலுக்குத் தவமிருக்க
மானிடப் பயிர்கள்
மழையில் நனைந்து
ஒரு கறுப்புக் குடை வேண்டிக்
கனவு காண்கின்றன.
விடுகதை:
இந்த தேசத்திலேயே
மிகவும் உயர்ந்தவன்
கிராம வாசியா
நகர வாசியா
இல்லை
விலைவாசி.
இல்லை:
உழுபவனுக்கு நிலமில்லை
உழைப்பவனுக்கு வேலையில்லை
எங்கள் தேசத்தின் பரப்புக்கும்
எல்லையே இல்லை.
கொள்ளைகள்:
என் வீட்டில் இன்று
இருநூறு பவுன் நகை
கொள்ளை போனது
ஏது இவ்வளவு நகைகள்?
எல்லாம் என் மனைவிக்கு
மாமனார் போட்டவை.
அவ்வாறெனில்
இன்று நடந்தது
மூன்றாவது கொள்ளை.
பெண்:
தங்கத்தில் சுவர் வைத்து
வைரத்தில் வாசல் வைத்தாலும்
அவள் வைக்கப்பட்ட இடம்
சிறையல்லவா.
குடைகள்:
வெண் கொற்றக் குடைநிழலில்
ரோஜாச் செடிகள்
வெயிலுக்குத் தவமிருக்க
மானிடப் பயிர்கள்
மழையில் நனைந்து
ஒரு கறுப்புக் குடை வேண்டிக்
கனவு காண்கின்றன.
விடுகதை:
இந்த தேசத்திலேயே
மிகவும் உயர்ந்தவன்
கிராம வாசியா
நகர வாசியா
இல்லை
விலைவாசி.
இல்லை:
உழுபவனுக்கு நிலமில்லை
உழைப்பவனுக்கு வேலையில்லை
எங்கள் தேசத்தின் பரப்புக்கும்
எல்லையே இல்லை.
கொள்ளைகள்:
என் வீட்டில் இன்று
இருநூறு பவுன் நகை
கொள்ளை போனது
ஏது இவ்வளவு நகைகள்?
எல்லாம் என் மனைவிக்கு
மாமனார் போட்டவை.
அவ்வாறெனில்
இன்று நடந்தது
மூன்றாவது கொள்ளை.
பெண்:
தங்கத்தில் சுவர் வைத்து
வைரத்தில் வாசல் வைத்தாலும்
அவள் வைக்கப்பட்ட இடம்
சிறையல்லவா.
கருத்துகள்
கருத்துரையிடுக