கலியுகம்

உண்மை அழிந்த யுகம்
தீமை வளர்ந்த யுகம்
பொய்மை நிறைந்த யுகம்
மனிதனைப் பொம்மையாக்கிய யுகம்
மடமை நிறைந்த யுகம்
கடமை மறந்த யுகம்
கண் இருந்தும் குருடாக்கிய யுகம்
காது இருந்தும் நல்லவை கேட்க மறந்த யுகம்
தன் கையை மறந்து பிறர் கையை எதிர்பார்க்கும் யுகம்
தன் வாயை மறந்து பிறர் வாயால் பேசும் யுகம்
நல்வழி மறந்து பாதையை இழந்த யுகம்
பிறப்பை மதிக்காத யுகம்
இறப்பை ஏற்காத யுகம்
மனிதனை மனிதன் மதிக்காத யுகம்
இயற்கையை அழிக்கும் யுகம்
இன்பம் குறைந்த யுகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை