புத்தம் புது காலை கவிதை

காலை என்பது ஒரு பொழுது-அது
பொதுவானது
தினம் ஒரு காலை
தினம் ஒரு மாலை-இருப்பினும்
காலை புதுமையைத் தரக்கூடியது
புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது
காலை எழுந்தவுடன் படிப்பு-ஏனெனில்
மனதில் அமைதி நிலவும் பொழுது
நிம்மதி கொடுக்கும் பொழுது
மெல்ல மெல்ல மயக்கம் தெளியும் பொழுது
சூரியனின் முதற்பொழுது
நிலவு மறையும் பொழுது
வானத்தின் வண்ணப்பொழுது
பூமிக்கு ஒளி வரும் பொழுது
வெளிச்சம் வரும் பொழுது
இருள் மறையும் பொழுது
இன்பம் தரும் பொழுது
மொத்தத்தில் பூமியின் புதுப்பொழுது
புத்தம் புது காலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை