தர்மனுக்கு வந்த சோதனை

தர்மதேவன் கேட்ட கேள்விகள்:

யட்சன்  : சூரியனை உதிக்க செய்வது 
                   யார்?
தர்மன்  : பிரம்மா
யட்சன்  : சூரியன் எதில் நிலைத்து நிற்கிறார்?
தர்மன்  : சத்தியத்தில்
யட்சன்  : ஒருவன் எதனால் சிறப்படைகிறான்?
தர்மன்  : மன உறுதியால்
யட்சன்  : உழவர்களுக்கு எது முக்கியம்?
தர்மன்  : மழை
யட்சன்  : விதைப்பதற்கு எது சிறந்தது?
தர்மன்  : நல்ல விதை
யட்சன்  : பூமியை விட பொறுமைமிக்கவர்?
தர்மன்  : தாய்
யட்சன்  : வானினும் உயர்ந்தவர் யார்?
தர்மன்  : தந்தை
யட்சன்  : காற்றினும் விரைந்து செல்லக் கூடியது?
தர்மன்  : மனம்
யட்சன்  : புல்லை விட அர்ப்பமானது ?
தர்மன்  : கவலை
யட்சன்  : ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்?
தர்மன்  : மகன்
யட்சன்  : ஒரு மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை?
தர்மன்  : மனைவி
யட்சன்  : ஒருவன் விட வேண்டியது?
தர்மன்  : தற்பெருமை
யட்சன்  : யார் உயிரற்றவன்?
தர்மன்  : வறுமையாளன்
யட்சன்  : எது தவம்?
தர்மன்  : மன அடக்கம்
யட்சன்  : பொறுமை என்பது எது?
தர்மன்  : இன்பத்துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்
யட்சன்  : உயர்ந்தோர் என்பவர் யார்?
தர்மன்  : நல்லொழுக்கம் உடையவர்
யட்சன் : மகிழ்ச்சி உடன் வாழ்பவர் யார்?
தர்மன் : கடன் வாங்காதவர்
யட்சன் : தூங்கும் போது கண்களை மூடாதது?
தர்மன்  : மீன்
யட்சன்  : இதயம் இல்லாதது?
தர்மன்  : கல்
யட்சன்  : பயணம் செய்பவனுக்கு உற்ற துணை? 
தர்மன்  : கல்வி
யட்சன்  : நோயாளிகளின் நண்பன்?
தர்மன்  : மருத்துவர்
யட்சன்  : உயிர் விடுபவனுக்கு நல்ல துணை?
தர்மன்  : அவர் செய்த நல்லறம்
யட்சன்  : வெற்றிக்கு அடிப்படை?
தர்மன்  : விடாமுயற்சி
யட்சன்  : எதனால் புகழடையலாம்?
தர்மன்  : இல்லாதவருக்கு ஒன்றைத் தருவது
யட்சன்  : உலகில் மிகச் சிறந்த தர்மம்?
தர்மன்  : கொல்லாமை
யட்சன்  : உலகெங்கும் நிறைந்திருப்பது?
தர்மன்  : அஞ்ஞானம்
யட்சன்  : முக்திக்கு வழி எது?
தர்மன்  : பற்றினை முற்றும் துறத்தல்
யட்சன்  : எது ஞானம்?
தர்மன்  : மெய்பொருளை அறிவது ஞானம்
யட்சன்  : ஒருவனுக்கு பகையாவது எது?
தர்மன்  : கோபம்
யட்சன்  : முக்திக்கு தடையாக இருப்பது?
தர்மன்  : நான் என்னும் ஆணவம்
யட்சன்  : பிறப்பிற்கு வித்திடுவது எது?
தர்மன்  : ஆசை
யட்சன்  : எப்போதும் நிறைவேறாதது?
தர்மன்  : பேராசை
யட்சன்  : யார் முனிவர்?
தர்மன்  : ஆசையற்றவர்
யட்சன்  : எது நல்வழி?
தர்மன்  : சான்றோர் செல்லும் வழி
யட்சன்  : எது வியப்பானது?
தர்மன்  : நாள்தோறும் பலர் இறப்பதை கண்ட போதும் தனக்கு மரணமில்லை என்று மனிதன் கருதுகிறானே அது தான் வியப்பானது
யட்சன்  : மீண்டும் பிறவி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தர்மன்  : எப்போதும் நல்லறமே செய்ய வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை