காதல் செய்வீர் உலகத்தீரே!

காதல் என்றால் என்ன என்றேன் என் அம்மாவிடம்
அவள் கூறினாள் அன்பென்று
காதலின் அர்த்தம் உணர்ந்தேன்
காதலிக்க ஆரம்பித்தேன்
என் தாயைக் காதலித்தேன்
அவள் அன்பை உணர்ந்தேன்
என் தந்தையைக் காதலித்தேன்
அவரின் கஷ்டம் புரிந்தேன்
என் சகோதரனைக் காதலித்தேன்
அவன் அக்கறை உணர்ந்தேன்
என் நண்பர்களைக் காதலித்தேன்
அவர்களின் நட்பைப் புரிந்தேன்
என் வாழ்க்கையைக் காதலித்தேன்
வாழ்வின் அர்த்தம் உணர்ந்தேன்
என்னை நான் காதலித்தேன்
என்னை நான் புரிந்தேன்
அனைவரும் காதல் செய்யுங்கள்
அன்பைப் பகிருங்கள்
காதல் செய்வீர் உலகத்தீரே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை