அம்மா கவிதை

அ என்றால் நினைவுக்கு வருவது அம்மா❤
அம்மா❤ என்றதும்  நினைவுக்கு வருவது அன்பு
அன்பென்றால் அவள் தான்❤
நம்மைக் கருவில் காத்தவளும் அவள் தான் ❤
நாளும் நம்மை நினைவில் வைத்தவள்❤
நெஞ்சம் முழுதும் நேசம் வைத்தவள்❤
உன் தவறை மறக்க தெரிந்தவள்❤
உன் வேதனையை சுமக்க தெரிந்தவள்❤
உன் நிந்தனையை ஏற்றுக் கொள்பவள்❤
உன்னை உச்சி நுகர பாராட்டுபவள்❤
உறவைக் கற்றுத் தருபவள்❤
உணர்வைப் புரிந்துக் கொள்பவள்❤
உண்மை பேசக் கற்றுக் கொடுத்தவள்❤
தன் பிள்ளைப் பேச்சைக் கேட்டு ஊமையானவள்❤
உன் பெருமை சொல்ல வார்த்தை இல்லை❤
உன் புகழ் சொல்லாத மேடை இல்லை❤
இத்துணை சிறப்புடைய படைப்பிற்கு 

அன்னையர் தின வாழ்த்துகள் 😍😍




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை