சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

சிறு சிறு சேமிப்பே பெரிய பெரிய தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. சிறு சிறு தவறுகளைத் திருத்தாததே பெரிய தவறுகளுக்குக் காரணமாகிறது. சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல அன்பு,நட்பு அனைத்தும் சேமித்து வைத்து கொள்ள வேண்டிய ஒன்றே. நம் சுற்றத்தார் தரும் சிறு சிறு அன்பையும் சேமித்து அதை விட பெரும் அன்பைத் தர வேண்டும். சிறு சிறு இனிய சொற்களே பெரிய சாதனையாளர்களை உருவாக்குகிறது, சிறு சிறு உயர்ந்த சிந்தனைகளே மாபெரும் சாதனையாளர்களை உருவாக்குகிறது.
        சிறுதுளி பெருவெள்ளம் என்பது தனிமனித செயல்களில் இருந்து தொடங்குகிறது. சிறு பொருள் தானே என்று துச்சமாக நினைக்காமல், ஒரு சிறு உழி தானே பெரும் சிலையை உருவாக்குகிறது, ஒரு அச்சாணி தானே
பெரிய தேரினை இழுக்கிறது என்பதை உணர வேண்டும்.
         சிறு பதவியில் இருக்கும் போது நாம் செய்யும் தவறைத் திருத்தி நற்பண்புகளைச் சேமித்தால் பெரும் பதவியை அடையும் தகுதி தானாக அமையும்.
        சிக்கனதின் சிறப்பை உணர்ந்தே அக்டோபர்31 ம் நாள் உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை