பழமொழியும் அதன் விளக்கங்களும்

1.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானாக வளரும் .
       ஊரான் பிள்ளையாகிய உன் மனைவியை ஊட்டி வளர்த்தால், உன் பிள்ளைத் தானாக வளரும் என்பதே இதன் பொருள்.

2.மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
     மண் குதிரை அல்ல குதிர் . மண் குதிர் என்றால் மணல் மேடுகள். மண் மேடு பாறை போல் தோன்றம் அளித்தாலும் அதை நம்பி ஆற்றில் இறங்க கூடாது என்பதே இதன் பொருள்.

3.ஆயிரம் பொய் சொல்லி திருமணம் நடந்தலாம்.
       இதன் பொருள் ஆயிரம் பேரிடம் சொல்லி திருமணம் நடந்தலாம் என்பது ஆகும்.

4.ஆடி காற்றில் அம்மியும் நகரும்.
      ஆடிக் காற்றில் அம்மை நோயும் பறக்கும் என்பதே இதன் பொருள்.

5.ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
      இதன் பொருள் ஆயிரம் வேரைக்
கொண்டவன் அரை வைத்தியன் என்பது ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை