இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தருமக்கு மார்கண்டேய மகரிஷி கூறிய கதை

மிதிலை நகரம் மிகுந்த செழிப்புடன் விளங்கியது. குடிமக்கள் அனைவரும் நலமாய் இருந்தார்கள். நகரை அடைந்த கௌசிகன்,  தருமவியாதனை எங்கே காணலாம்?  என்று விசாரித்தார். ஏனெனில், தரும வியாதன் மிகப்பெரும் என ஒரு பெண் சொன்னதைக் கேட்டு கௌசிக முனிவர் அவரைப் பார்க்க வந்தார். பிறகு அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துக் கொண்ட கௌசிகன் அங்கே போனான்.  அப்போது தரும வியாதன் கசாப்புக்கடை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இறைச்சி வாங்குவோர் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தான். வேலை முடிந்ததும்,  பிராமணன் ஒருவன் தனக்காக காத்திருப்பதைக் கவனித்த தருமவியாதன் பரபரப்புடன் எழுந்து கௌசிகனிடம் வந்தான்.  பிராமணரே!  நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.  தரும வியாதன் அவனிடம், "பிராமணரே! இந்த இடம் உனக்கு ஏற்றதன்று. உமக்கு விருப்பம் இருந்தால் நம் வீட்டிற்குப் போகலாம் வாருங்கள் "என்று சொல்லி தருமவியாதன் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்துப் போனான்.  வீட்டை அடைந்ததும் கௌசிகனை முறைப்படி அவன் உபசரித்தான். அப்போது கௌசிகன் தருமவியாதனிடம் " ஐயா!  ஹிம்...

நட்பு கவிதை

ஒன்றாக பிறக்கவும் இல்லை ஒன்றாக வளரவும் இல்லை - ஆனால் நீ தந்த நினைவுகள் ஒரு சிறு புன்முறுவலாய் என்னிடம் தஞ்சம் கொண்டது