தருமக்கு மார்கண்டேய மகரிஷி கூறிய கதை
மிதிலை நகரம் மிகுந்த செழிப்புடன் விளங்கியது. குடிமக்கள் அனைவரும் நலமாய் இருந்தார்கள். நகரை அடைந்த கௌசிகன், தருமவியாதனை எங்கே காணலாம்? என்று விசாரித்தார். ஏனெனில், தரும வியாதன் மிகப்பெரும் என ஒரு பெண் சொன்னதைக் கேட்டு கௌசிக முனிவர் அவரைப் பார்க்க வந்தார். பிறகு அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துக் கொண்ட கௌசிகன் அங்கே போனான்.
அப்போது தரும வியாதன் கசாப்புக்கடை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இறைச்சி வாங்குவோர் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தான். வேலை முடிந்ததும், பிராமணன் ஒருவன் தனக்காக காத்திருப்பதைக் கவனித்த தருமவியாதன் பரபரப்புடன் எழுந்து கௌசிகனிடம் வந்தான்.
பிராமணரே! நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
தரும வியாதன் அவனிடம், "பிராமணரே! இந்த இடம் உனக்கு ஏற்றதன்று. உமக்கு விருப்பம் இருந்தால் நம் வீட்டிற்குப் போகலாம் வாருங்கள் "என்று சொல்லி தருமவியாதன் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்துப் போனான்.
வீட்டை அடைந்ததும் கௌசிகனை முறைப்படி அவன் உபசரித்தான். அப்போது கௌசிகன் தருமவியாதனிடம் " ஐயா! ஹிம்சையான இந்தத் தொழிலில் நீர் ஈடுபட்டிருப்பதும் உம் தகுதிக்கு அடுக்காது" என்று சொன்னான்.
அப்போது தருமவியாதன், " பிராமணரே! எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் என் முன்னோர்கள் செய்த தொழிலை செய்கிறேன். பெற்றோருக்கு கடமை உணர்வோடு நான் பணிவிடை செய்கிறேன். உண்மையையே பேசுகிறேன். நான் பொறமைப்படுவது இல்லை. எனது சக்திக்கு ஏற்றபடி தான தருமம் தவறாது செய்கிறேன். விருந்தினர் முதலியோரை உபசரித்த பின்னர் மீதம் இருப்பதை உண்கிறேன். எதையும் யாரையும் நான் இகழ்ந்து பேசுதல் இல்லை. இறைச்சியை விற்ற போதிலும் அதை நான் உண்பது இல்லை என்று தெரிவித்தான்.
மேலும் கூறுகிறார், " தவசீலரே! எவன் கெட்ட காரியங்களை அதிகமாகச் செய்து, ஆடம்பரத்துடன் வாழ்கிறானோ அவன் பிராமணனாகப் பிறந்தாலும், அவன் உண்மையில் பிராமணன் ஆகான். சத்தியத்திலும், தருமத்திலும் பிடிப்பு உள்ளவனும், புலன் அடக்கம் உள்ளவனையும் முயற்சி உடையவனாயும் எவன் இருக்கிறானோ, அவனே சிறந்தவன் ஆவான்.
இவ்வாறு மார்க்கண்டேய மகரிஷி இந்த அற்புதமான கதையைத் தருமருக்கு சொன்னார்.
"இந்த கதையால் நான் நற்பயன் அடைந்தேன்" என்று தருமர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக