இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாதவி ஆடிய பதினொரு ஆடல்கள்

1.அல்லி - கம்சன் ஏவிய மதயானையின் கொம்பை முறிப்பதைக் குறிக்கும்  2.கொடுகொட்டி - திரிபுரத்தை எரித்த வெற்றிக் களிப்பில் சிவன் ஆடிய கூத்து  3.குடை - படைகளை இழந்து அசுரர்கள் தோல்வியடைந்த போது முருகன் தன் குடையைச் சாய்த்து ஆடியது 4.குடம் - காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காக கண்ணன் குடத்தின் மீது ஆடியது 5. பாண்டரங்கம் - தேரின் முன்னே நின்ற நான்முகன் காணுமாறு பாரதி ஆடியது 6.மல்லாடல் - வாணாசுரன் என்னும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாகி ஆடியது  7. துடியாடல் - சூரபதுமனை வென்ற முருகன் வெற்றிக் களிப்பால் கடலின் மீது ஆடியது  8.கடையம் - இந்திராணி என்னும் தெய்வ நங்கை கடைசியர் (உழவர்) வேடம் கொண்டு ஆடியது 9.பேடு - ஆண்மைத் தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடியது 10.மரக்கால் - அசுரரின் வஞ்சம் கொடுந்தொழிலைப் பொறுக்காமல் துர்க்கை மரக்கால் கொண்டு ஆடியது 11.பாவைக் கூத்து - அசுரரின் வெம்மையான போர்க்கோலம் நீங்க, செந்நிறம் உடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடியது