இடுகைகள்

மாதவி ஆடிய பதினொரு ஆடல்கள்

1.அல்லி - கம்சன் ஏவிய மதயானையின் கொம்பை முறிப்பதைக் குறிக்கும்  2.கொடுகொட்டி - திரிபுரத்தை எரித்த வெற்றிக் களிப்பில் சிவன் ஆடிய கூத்து  3.குடை - படைகளை இழந்து அசுரர்கள் தோல்வியடைந்த போது முருகன் தன் குடையைச் சாய்த்து ஆடியது 4.குடம் - காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காக கண்ணன் குடத்தின் மீது ஆடியது 5. பாண்டரங்கம் - தேரின் முன்னே நின்ற நான்முகன் காணுமாறு பாரதி ஆடியது 6.மல்லாடல் - வாணாசுரன் என்னும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாகி ஆடியது  7. துடியாடல் - சூரபதுமனை வென்ற முருகன் வெற்றிக் களிப்பால் கடலின் மீது ஆடியது  8.கடையம் - இந்திராணி என்னும் தெய்வ நங்கை கடைசியர் (உழவர்) வேடம் கொண்டு ஆடியது 9.பேடு - ஆண்மைத் தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடியது 10.மரக்கால் - அசுரரின் வஞ்சம் கொடுந்தொழிலைப் பொறுக்காமல் துர்க்கை மரக்கால் கொண்டு ஆடியது 11.பாவைக் கூத்து - அசுரரின் வெம்மையான போர்க்கோலம் நீங்க, செந்நிறம் உடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடியது

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

     சைவ சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் 14. இவை மெய்கண்ட சாத்திரங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  1. திருவுந்தியார்.    - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் 2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் 3. சிவஞானபோதம் - மெய்கண்டார் 4. சிவஞான சித்தியார் - அருள்தந்தி சிவாச்சாரியார்  5. இருபா இருபஃது - அருள்தந்தி சிவாச்சாரியார்  6. உண்மை விளக்கம்  - திருவதிகை மணவாசகம் கடந்தார்  7. சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார்  8. திருவருட்பயன் - உமாபதி சிவாச்சாரியார்  9. வினாவெண்பா - உமாபதி சிவாச்சாரியார்  10. போற்றி வெண்பா - உமாபதி சிவாச்சாரியார்  11. கொடிக்கவி  -  உமாபதி சிவாச்சாரியார்  12. நெஞ்சு விடு தூது  - உமாபதி சிவாச்சாரியார்  13. உண்மை நெறி விளக்கம்  - உமாபதி சிவாச்சாரியார்  14. சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாச்சாரியார் 

தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்

தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்  1.கவியரசர் -கண்ணதாசன் 2.கவிப்பேரரசு-வைரமுத்து 3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர் 4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார் 5.மதுரகவி-பாஸ்கரதாஸ் 6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார் 7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார் 8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார் 9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர் 10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர் 11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர் 12.தேசிய கவிஞர்-பாரதியார் 13.கவியோகி-சுத்தானந்த பாரதியார் 14.உவமை கவிஞர்-சுரதா 15.பாவேந்தர்-பாரதிதாசன் 16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை 18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை 19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர் 20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை 21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை 22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார் 23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன் 24.திரை கவித்திலகம்-மருதகாசி 25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி 26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி 27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர் 28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள் 29.பெருந்தலைவர்- காமராசர

நிகண்டுகள் ஆசிரியர்கள்

* கயாதர முனிவர் - கயாதர நிகண்டு * ஆண்டிப் புலவர்  - ஆசிரிய நிகண்டு  * திருவேண்கட பாரதி - தீப நிகண்டு * சாமிநாத கவிராயர் - பொதிகை நிகண்டு  * மண்டல புருடர் - சூடாமணி நிகண்டு  * திவாகர முனிவர் - திவாகரம் (சேந்தன் திவாகரம்)  * பிங்கல முனிவர் - பிங்கலந்தை(பிங்கல நிகண்டு)  * காங்கேயர் - உரிச்சொல் நிகண்டு  * இரேவண சித்தர் - அகராதி நிகண்டு 

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

* கந்தர் கலி வெண்பா  * மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் * நீதிநெறி விளக்கம்  * திருவாரூர் நான்மணிமாலை * முத்துக்குமார சுவாமி  பிள்ளைத்தமிழ் * சிதம்பர மும்மணிக் கோவை * மதுரைக் கலம்பகம் * சிதம்பர செய்யுட் கலம்பகம் * பண்டார மும்மணிக் கோவை * சகலகலா வல்லி மாலை * காசுக்  கலம்பகம்