தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அதன் விளக்கமும்

செய்யுள்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்                                                          -  கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக்                                                         - கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல்
                                           - திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந்
                                           - திலகமுமே!
அத்திலக வாசனைபோல்             
            - அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்
                                           - தமிழணங்கே!
                                             தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
         - செயல்மறந்து வாழ்த்துதுமே!
                                         வாழ்த்துதுமே!
                                         வாழ்த்துதுமே!           - மனோன்மணியம்.பெ.சுந்தரனார்.

பாடல் விளக்கம்

* நீராருங் கடலுடுத்த ( நீர் நிரம்பிய கடலை ஆடையாக அணிந்த)

* நிலமடந்தைக் கெழிலொழுகும்(நிலமாகிய பெண்ணுக்கு அழகு சொட்டுகின்ற)

*சீராரும் வதனமெனத்(சமத்தன்மை நிறைந்த முகமாக)

*திகழ்பரதக் கண்டமிதில்(விளங்கும் பாரதக் கண்டத்தில்)

*தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்(தக்காணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்)

*தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே(பொருத்தமான பிறை போன்ற சிறிய நெற்றியும் அதிலிட்ட மணம் வீசும் பொட்டுமே)

* அத்திலக வாசனைப்போல் அனைத்துலகும் இன்பமுற(அந்த திலகத்தின் வாசனைப் போல அனைத்து உலகும் இன்பம் உற)

* எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே(எல்லா திசைகளிலும் புகழ் மணக்க இருந்த பெருமை மிக்க தமிழாகிய பெண்ணே)

* உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே(உன் இளமை மாதா பண்புக் கண்டு செய்வதறியாவது போற்றுகின்றோமே).


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை