தீமைகளில் பழகிவிட்டால் மீள முடியாது சிறுகதை

     

 முனிவர் ஒருவர் பன்றிகளைத் தூய்மைபடுத்த நினைத்தார்.  தூய்மையான வாழ்க்கையை அவற்றுக்குக் கற்பிக்க கருதினார்.  முனிவராக இருந்து சொன்னால் அவை கேட்குமா?  எனவே தன் மகனை அழைத்து கூறினார், "மகனே!  நான் பன்றிகளைத் திருத்த வேண்டும். எனவே நான் பன்றியாக உருமாறி வாழ போகிறேன்.  சில நாள் கழித்து வந்து என்னை மீட்டெடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு சென்றார்.  முனிவர் பன்றியாய் மாறி அவற்றின் உலகில் வாழ்ந்தார்.   சேற்றில்  அலைந்தார், தெருவில் அலைந்தார்,  புழுதியில் குளித்தார்,  மலமும் தின்றார்.  மாமுனிவர்க்குரிய குணங்கள் அவரிடம் இருந்து மறைந்தன.  மகன் சிலநாள் கழித்துத் தந்தையைத் தேடி வந்தான்.  அவனிடம் முனிவர், "மகனே!  இந்த வாழ்வில் நான் பழகிப் போனேன்.  இனி இதை விடமுடியாது.  நீ போய்வா" என்று கூறிவிட்டார். 

 
        தீமைகளில் பழகிவிட்டால் மீளமுடியாது.  இதனை உணர்ந்து நம் வாழ்வில் தீமைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை