செய்யும் தொழிலே தெய்வம்

   வழக்கறிஞர் ஒரு சாட்சியை விசாரித்தார். அந்த சாட்சி ஒரு நடிகர்.  வழக்கறிஞர் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அவர் பெயர் ஊர் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டு இறுதியாக அவரின் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் தான் ஒரு நடிகன் என்று கூறினார்.  அதற்கு அந்த வழக்கறிஞர் கூறினார் அது அவ்வளவு நல்ல தொழில் இல்லையே என்றார்.
  அதற்கு அந்த நடிகர் கூறினார் அது என் தந்தையின் தொழிலை விட சிறந்தது என்று. வழக்கறிஞர் அவரின் தந்தையின் தொழில் என்ன என்று விசாரித்தார்.  அவரும் உங்களைப் போல ஒரு வழக்கறிஞர் தான் என்றார் அவர். 
     தொழில் மேல் கொண்ட பற்று அந்த நடிகரைக் காப்பாற்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை