இளமையைத் தேடி

    வயதாகிக் கூனிக் குறுகி கேள்விக் குறி போல வளைந்து  விட்டார் ஒரு முதியவர்.  அவர்  அப்படி  ஆனதற்கு காரணம் புரியாமல் நின்ற நிலையில்  சிறுவன் ஒருவன் அவரைக் கேட்டான் " தாத்தா தரையில் என்ன தேடுகின்றீர்கள்" என்று.  தாத்தா அமைதியாக சொன்னார்.  " காணாமல் போன என் இளமையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.  தம்பி!  உன்னுடையதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று.  எனவே இளமை காலத்தை இழந்து விட்டவர்கள் மீண்டும் அதனைப் பெற போவதில்லை. ஆகவே இளைஞர்கள் இளமைப் பருவத்தின் ஒவ்வொரு நொடியும் தங்களின் எதிர்கால மாளிகையின் அடிதளத்திற்குரிய கல்லாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை