இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதோ ஓர் இனிய ஆண்டை நோக்கி

ஆண்டுகள் பல கழிந்தோடின.... அன்பாய் இருந்த சில காலங்கள் அழகாய் சேர்ந்த புது உறவுகள் இதழின் ஒரு ஓரத்தில்.... ஒரு புன்சிரிப்பில் சிற்பிக்குள் உள்ள முத்தாய்.... அனைவருக்கும் வாழ்த்து அன்னையின் அரவணைப்பில் இன்னும் நாட்கள் நீள தந்தை பாதுகாப்பில் நாட்கள் நகர சகோதரன் உடன் சண்டையிட சகோதரியிடம் வம்பிழுக்க தோழனாய் தோழியாய் எதிர்பார்ப்பின்றி சின்னஞ்சிறு கனவுகளுடன் இனிய ஆண்டை நோக்கி அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!! 

மௌனம்

படம்

இளமையைத் தேடி

    வயதாகிக் கூனிக் குறுகி கேள்விக் குறி போல வளைந்து  விட்டார் ஒரு முதியவர்.  அவர்  அப்படி  ஆனதற்கு காரணம் புரியாமல் நின்ற நிலையில்  சிறுவன் ஒருவன் அவரைக் கேட்டான் " தாத்தா தரையில் என்ன தேடுகின்றீர்கள்" என்று.  தாத்தா அமைதியாக சொன்னார்.  " காணாமல் போன என் இளமையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.  தம்பி!  உன்னுடையதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று.  எனவே இளமை காலத்தை இழந்து விட்டவர்கள் மீண்டும் அதனைப் பெற போவதில்லை. ஆகவே இளைஞர்கள் இளமைப் பருவத்தின் ஒவ்வொரு நொடியும் தங்களின் எதிர்கால மாளிகையின் அடிதளத்திற்குரிய கல்லாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

புகைப் பழக்கமும் மதுபழக்கமும் சிறுகதை

   பெர்னாட்சாவின் தந்தை பெரிய குடிகாரர்.  ஆனால் பெர்னாட்சா மறந்தும் மதுவைத் தீண்டாதவர். நீங்கள் ஏன் குடிப்பதில்லை?  என்று பெர்னாட்சாவை ஒருவர் கேட்டார்.  அதற்கு அவர் " நான் குடிக்க வேண்டியதை எல்லாம் என் அப்பா குடித்து விட்டார்.  ஆகவே நான் குடிக்கவில்லை " என்றார்.  அப்பா குடிகாரர் என்பதால் மகன் குடிகாரராக இருக்க வேண்டும் என்பதில்லை.  ஆனால்  ஒரு தந்தை தன் மகன் தன்னைப் பார்த்து குடிக்கக்கூடும் என குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம்.       விடாமல் புகை பிடிக்கும் ஒருவர் கூறுகையில் " நான் சிகரெட் காக  செலவழித்ததை எல்லாம் வைத்திருந்தால் ஒரு வீடு கட்டி இருக்கலாம் இன்று முதுமையில் எனக்கு வீடில்லை.  உடம்பில் ஆரோக்கியம் இல்லை.  ஆனால் நான் அவற்றுக்காக வருந்தவில்லை.  என் மகன் இப்போது  சிகரெட் பிடிப்பது பார்த்து தான் நான் மனதிற்குள் அழுகிறேன். 

செய்யும் தொழிலே தெய்வம்

   வழக்கறிஞர் ஒரு சாட்சியை விசாரித்தார். அந்த சாட்சி ஒரு நடிகர்.  வழக்கறிஞர் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அவர் பெயர் ஊர் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டு இறுதியாக அவரின் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் தான் ஒரு நடிகன் என்று கூறினார்.  அதற்கு அந்த வழக்கறிஞர் கூறினார் அது அவ்வளவு நல்ல தொழில் இல்லையே என்றார்.   அதற்கு அந்த நடிகர் கூறினார் அது என் தந்தையின் தொழிலை விட சிறந்தது என்று. வழக்கறிஞர் அவரின் தந்தையின் தொழில் என்ன என்று விசாரித்தார்.  அவரும் உங்களைப் போல ஒரு வழக்கறிஞர் தான் என்றார் அவர்.       தொழில் மேல் கொண்ட பற்று அந்த நடிகரைக் காப்பாற்றியது.

தீமைகளில் பழகிவிட்டால் மீள முடியாது சிறுகதை

படம்
       முனிவர் ஒருவர் பன்றிகளைத் தூய்மைபடுத்த நினைத்தார்.  தூய்மையான வாழ்க்கையை அவற்றுக்குக் கற்பிக்க கருதினார்.  முனிவராக இருந்து சொன்னால் அவை கேட்குமா?  எனவே தன் மகனை அழைத்து கூறினார், "மகனே!  நான் பன்றிகளைத் திருத்த வேண்டும். எனவே நான் பன்றியாக உருமாறி வாழ போகிறேன்.  சில நாள் கழித்து வந்து என்னை மீட்டெடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு சென்றார்.  முனிவர் பன்றியாய் மாறி அவற்றின் உலகில் வாழ்ந்தார்.   சேற்றில்  அலைந்தார், தெருவில் அலைந்தார்,  புழுதியில் குளித்தார்,  மலமும் தின்றார்.  மாமுனிவர்க்குரிய குணங்கள் அவரிடம் இருந்து மறைந்தன.  மகன் சிலநாள் கழித்துத் தந்தையைத் தேடி வந்தான்.  அவனிடம் முனிவர், "மகனே!  இந்த வாழ்வில் நான் பழகிப் போனேன்.  இனி இதை விடமுடியாது.  நீ போய்வா" என்று கூறிவிட்டார்.            தீமைகளில் பழகிவிட்டால் மீளமுடியாது.  இதனை உணர்ந்து நம் வாழ்வில் தீமைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் . 

Good morning 😊wishes 😍

படம்

இனிய இரவு வணக்கம்

படம்

Happy children's day

படம்
                                                       மழலை  சொல் என்றும் பொய்யுரைப்பதில்லை                                                                  மழலை குரல் போல் இனிதாவதில்லை                                                                                           உண்மையான அன்பும்                                                                                      கள்ளங்கபடமற்ற சிரிப்பும்                                                                                      இயற்கையின் அதிசயமும்                                                                                                     மழலைகளே!!!

Butterfly photo

படம்

Beauty of nature photography

படம்

Brother and sister relationship quotes

படம்

நம்பிக்கை

நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் யார் முன்னேயும் மண்டியிடுவது இல்லை. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை போதும் இந்த உலகை வெல்ல முயன்று கொண்டே இருங்கள் முயற்சியும், உன் மேல் நீ கொண்ட நம்பிக்கையும், வாழ்க்கை முறையை இனிமையாக்கும். கனவு நம்பிக்கை முயற்சி வெற்றிக்கான படிகள்.

அப்துல்கலாம் பொன்மொழி

படம்

பெண் சுதந்திரம் கவிதை

படம்
பெண்ணே... நீ அனைத்து சுதந்திரங்களும் பெற்றவள் தான் உன் பிறப்பிற்கு சுதந்திரம் உண்டு-ஆனால் உன் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாதது கல்வி சுதந்திரம் உண்டு கற்க மட்டுமே உன்னிடம் உரிமை உள்ளது கருத்தைப் பகிர அல்ல பணிக்குச் செல்ல சுதந்திரம் உள்ளது-ஆனால் செலவு செய்யும் உரிமை இல்லை விரும்பியவரைக் கைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது ஆணவ கொலைகளும் உள்ளன நீ பூமியாய் நதியாய் போற்றப்படுவாய் மற்றவர் விரும்பும் படி நீ வாழுகையில் உனக்கு பறக்க சிறகுகள் தரப்படும் கூண்டுகளோடு கூடிய சிறகுகள் பல துறைகள் கற்பாய் அனைத்தையும் சமையலறையில் செலவிட அனைத்தையும் மீறி எழும் பெண்கள் பல அவர்களில் வெற்றி காண்பவரோ சில நீயோ!வானத்தில் தெரியும் நட்சத்திரம் போல் அனைவரும் தொலைவில் நின்றே உன்னைப் பார்க்கின்றனர் அருகில் வரும் வேளையில் தெரியும் நீ எவ்வளவு பெரிய சக்தி என்று சின்னஞ்சிறு கதைகள் பேசி கல்வி கற்க தகுதி இல்லாதவலாய் இருந்த பெண்கள் என்பது அந்தக்காலம் அண்டைவீட்டாரையும் நம்ப முடியாமல் தொடுதல் முறைகளை கற்றுக் கொடுப்பது இந்தக்காலம் அடிமைத்தனமும் மாறவில்லை அடக்குமுறையும் மாறவில்லை உண்மையில்

Smiling quote

படம்

Shakespeare famous quote

படம்

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

படம்

பா.விஜய் அவர்களின் ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள்

படம்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே!ஓ மனமே! நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மறந்துபொகும் மாயங்கள் உளிதாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும் வலிதாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருகில்லை போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்? ஒரு கனவு கண்டால் அதை தினம் முன்றால் ஒரு நாளில் நிஜமாகும் மனமே! ஓ மனமே! நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும் தோல்வி இன்றி வரலாறா? துக்கம்

Success quote

படம்

பசி கவிதை

படம்
வாடிய வயிற்றின் குரல்... குடல்கள் கதறக்   கண்கள் இருட்ட... செவிகளும் சத்தமிட்டது   பசியில்... படைத்தவன் அலட்சியத்தால்   பசியொடு நானிருக்க... மிச்ச மீதியையும் குப்பையில்   எறிகிறது சமூகம்! குப்பையில் கிடக்கும்   உணவை எண்ணி புன்னகிக்கிறது எங்கள் வயிறு!   உழைக்க வயதில்லாத உருவத்தில் சிறியவரும்   உழைத்து உழைத்து வாடிய வயதில் பெரியவரும்   பிழைக்க வழியில்லாமல் பசியால் வாடுகின்றனர்   சிலைக்கு உணவூட்டி மகிழும் சிந்தனை உலகத்தில்   சிலரின் பசிக்கும் உணவளித்து அன்னத்தை வீணாக்காமல்   அன்னதானம் ஆக்கலாம் பசியைத் தவிர்க்கலாம்.

Peacock modern art

படம்

Happiness

படம்

துன்பத்திலும் சிரியுங்கள்

படம்