இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிப்ரான் சொன்ன உருவக கதை

     ஒரு ஊரில் ஆத்திகர் ஒருவரும் நாத்திகர் ஒருவரும் இருந்தனர். ஆத்திகர் மக்களிடைய தன் கருத்தைப் பகிர மக்கள் அனைவரும் அதுவே சரி என நினைப்பார்கள். இவர் பேசி முடித்த அடுத்த நொடியே நாத்திகர் வந்து தன்  கருத்தைப் பகிர  அதுவும் சரி என மக்களுக்குத் தோன்றியது. நாள்தோறும்  இவ்வாறே தொடர்ந்த நிலையில் மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஒரு முடிவு எடுத்தனர். இருவரையும் ஒரே மேடையில் வாதம் செய்ய அழைத்தனர்.       இருவரின் வாதமும் தீப்பொறியாய் இருந்தது. பின் வாதத்தின்  முடிவில் ஆத்திகர் நாத்திகராகவும் நாத்திகர் ஆத்திகராகவும் மாறினர்.           தன் கொள்கையில் பிடிப்பில்லாத ஒருவரால் அதில் நிலைத்து நிற்க முடியாது.

நாட்டுப்புறக் கலைகள்

ஆதியில் தவழ்ந்து முன்னோர்களால் தளிர்நடைப் போட்டு களிப்பையும் கருத்தையும் ஒருங்கே தரும் கலை - நம் நாட்டுப்புறக் கலை...  கலாச்சாரமாய் - இன்று பாங்குடன் மிளிரும் நாட்டுப்புறக் கலைகள்  ஒன்றா....  இரண்டா....  நாட்டுப்புறப் பாடல்கள்  தாலாட்டு முதல் பனிமலர் வரை ஆடல் வகைகள் கும்மி தொடங்கி கரகம் வரையாக பல வகையுண்டு இன்னும் பல ஆட்டங்கள் கோலாகலமாய் பூத்துக்குலுங்கிய கூட்டங்கள் விரலிலே வித்தைக் காட்ட சிலம்பம் கூடி நின்று கைக்கொட்டிப் பாட கும்மி பொம்மை வைத்து கதை சொல்ல பொம்மலாட்டம் தலையில் கரகம் வைத்து மக்களை மகிழ்விக்கும் கரகம் - என உள்ளத்துணர்வுகளைச் செப்பனிட்டுக் காட்டியது நாட்டுப்புறக் கலைகள்...  சிரிப்பிற்கு பஞ்சமில்லாத சிந்தனைக்கு தஞ்சமென இருந்த நாட்டுப்புறக்கலை காலங்களின் மாற்றம் கலைகளின் பேரேமாற்றம் கலைஞர்களின் திண்டாட்டம்  கலாச்சாரக் கலைகள் - இன்று எழுத்துகளில் மட்டும்  காலங்களை வெல்லும்  கலைஞர்களின் பெருமை மறைந்து கதைகளாய் மட்டும் இன்று!!!

மனதில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,      வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் ,     நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ; கனவு மெய்ப்பட வேண்டும் ,    கைவசமாவது விரைவில் வேண்டும்;  தனமும் இன்பமும் வேண்டும்,     தரணியிலே பெருமை வேண்டும் . கண் திறந்திட வேண்டும் ,     காரியத்தி லுறுதி வேண்டும் ; பெண் விடுதலை வேண்டும் ,      பெரிய கடவுள் காக்க வேண்டும் ; மண் பயனுற வேண்டும் ,     வானகமிங்கு தென்பட வேண்டும் , உண்மை நின்றிட வேண்டும் ;               ஓம் ஓம் ஓம் ஓம்! 

பாரதிதாசன் கூறும் தமிழின் பெருமை

  தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!  தமிழுக்கு மணமென்று பேர்!  - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!  தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!  தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!  இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!  தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!  - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!  - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ! 

World Earth Day april 22

படம்
  உலகபூமிதினம் World Earth day.  April 22.  பூமி மாசுபடுவதை தடுக்க ஒரு விழிப்புணர்ச்சியாகவே பூமி தினம் கொண்டாட படுகிறது.. பூமி அன்னையின் கழுத்தில் கத்தியை வைப்பது போன்றது இயற்கை வளங்களை அழிப்பது..!!  நம்மை காத்து கொள்ளவாது இயற்கை வளங்களை காப்போம்...!!!! நம் அன்னையை பாதுகாப்பது போல் அன்னைபூமியையும் பாதுகாப்போம்.. அன்புடன் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.🙏🙏🙏

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்
 

அம்பேத்கர் பொன்மொழிகள்

படம்
  # ஆடுகளைத் தான் கோயில்களில் பலி கொடுக்கிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல.  அதனால் நாம் ஆடுகளாக இல்லாமல் சிங்கங்களாக இருந்தால் தான் மற்றவர் நம்மை அடிமைப் படுத்த மாட்டார்கள். # ஜனநாயகத்தில் ஒரு கட்சியே பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்துவது ஆரோக்கியமான போக்கல்ல. இவ்வாறு ஆட்சி நடத்தும் கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்வதும் பொறுத்தமற்றதாகும்.  # சுயமரியாதையை இழந்து வாழ நினைப்பது மிகப் பெரிய அவமானமாகும். ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் மிக அவசியமான அம்சமான சுயமரியாதையோடு நாம் ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். 

வீடு என் கனவு

படம்
வ ண்ணக் கனவெல்லாம் மாளிகைகள் வீடுதோறும் அறைகள் அலமாரிகள்...  ஒவ்வொரு செங்கல்லாய் சேமித்து சின்ன சின்ன ஆசை துறந்து சேர்த்த மொத்தமும்  களத்தில் கால் வைத்தவுடன் கறைந்து பல நாள் கனவில் மூழ்கி முதுகில் சுமக்கிறது கடன் கதவு தேக்கினால் ஜன்னல் கண்ணாடி  வாடகை மறந்த நிலை  மழைக்கு அஞ்சாப் போக்கு ஆழ்ந்து உறங்கிட அப்பாடி என அமர்ந்திட நாளெல்லாம் தவறாத கனவு - இன்று  என் கண் முன்!