மனதில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும், 
    வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் ,
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்ப்பட வேண்டும் ,
   கைவசமாவது விரைவில் வேண்டும்; 
தனமும் இன்பமும் வேண்டும்,
    தரணியிலே பெருமை வேண்டும் .
கண் திறந்திட வேண்டும் ,
    காரியத்தி லுறுதி வேண்டும் ;
பெண் விடுதலை வேண்டும் ,
     பெரிய கடவுள் காக்க வேண்டும் ;
மண் பயனுற வேண்டும் ,
    வானகமிங்கு தென்பட வேண்டும் ,
உண்மை நின்றிட வேண்டும் ;
              ஓம் ஓம் ஓம் ஓம்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை