நாட்டுப்புறக் கலைகள்

ஆதியில் தவழ்ந்து

முன்னோர்களால் தளிர்நடைப் போட்டு

களிப்பையும் கருத்தையும்

ஒருங்கே தரும் கலை - நம்

நாட்டுப்புறக் கலை... 

கலாச்சாரமாய் - இன்று

பாங்குடன் மிளிரும் நாட்டுப்புறக் கலைகள் 

ஒன்றா....  இரண்டா.... 

நாட்டுப்புறப் பாடல்கள் 

தாலாட்டு முதல் பனிமலர் வரை

ஆடல் வகைகள்

கும்மி தொடங்கி கரகம் வரையாக

பல வகையுண்டு

இன்னும் பல ஆட்டங்கள்

கோலாகலமாய் பூத்துக்குலுங்கிய கூட்டங்கள்

விரலிலே வித்தைக் காட்ட சிலம்பம்

கூடி நின்று கைக்கொட்டிப் பாட கும்மி

பொம்மை வைத்து கதை சொல்ல பொம்மலாட்டம்

தலையில் கரகம் வைத்து

மக்களை மகிழ்விக்கும் கரகம் - என

உள்ளத்துணர்வுகளைச் செப்பனிட்டுக் காட்டியது

நாட்டுப்புறக் கலைகள்... 

சிரிப்பிற்கு பஞ்சமில்லாத

சிந்தனைக்கு தஞ்சமென இருந்த

நாட்டுப்புறக்கலை


காலங்களின் மாற்றம்

கலைகளின் பேரேமாற்றம்

கலைஞர்களின் திண்டாட்டம் 

கலாச்சாரக் கலைகள் - இன்று

எழுத்துகளில் மட்டும் 

காலங்களை வெல்லும் 

கலைஞர்களின் பெருமை மறைந்து

கதைகளாய் மட்டும் இன்று!!!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை