இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

     சைவ சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் 14. இவை மெய்கண்ட சாத்திரங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  1. திருவுந்தியார்.    - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் 2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் 3. சிவஞானபோதம் - மெய்கண்டார் 4. சிவஞான சித்தியார் - அருள்தந்தி சிவாச்சாரியார்  5. இருபா இருபஃது - அருள்தந்தி சிவாச்சாரியார்  6. உண்மை விளக்கம்  - திருவதிகை மணவாசகம் கடந்தார்  7. சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார்  8. திருவருட்பயன் - உமாபதி சிவாச்சாரியார்  9. வினாவெண்பா - உமாபதி சிவாச்சாரியார்  10. போற்றி வெண்பா - உமாபதி சிவாச்சாரியார்  11. கொடிக்கவி  -  உமாபதி சிவாச்சாரியார்  12. நெஞ்சு விடு தூது  - உமாபதி சிவாச்சாரியார்  13. உண்மை நெறி விளக்கம்  - உமாபதி சிவாச்சாரியார்  14. சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாச்சாரியார் 

தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்

தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்  1.கவியரசர் -கண்ணதாசன் 2.கவிப்பேரரசு-வைரமுத்து 3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர் 4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார் 5.மதுரகவி-பாஸ்கரதாஸ் 6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார் 7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார் 8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார் 9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர் 10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர் 11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர் 12.தேசிய கவிஞர்-பாரதியார் 13.கவியோகி-சுத்தானந்த பாரதியார் 14.உவமை கவிஞர்-சுரதா 15.பாவேந்தர்-பாரதிதாசன் 16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை 18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை 19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர் 20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை 21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை 22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார் 23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன் 24.திரை கவித்திலகம்-மருதகாசி 25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி 26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி 27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர் 28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள் 29.பெருந்தலைவர்- காமராசர

நிகண்டுகள் ஆசிரியர்கள்

* கயாதர முனிவர் - கயாதர நிகண்டு * ஆண்டிப் புலவர்  - ஆசிரிய நிகண்டு  * திருவேண்கட பாரதி - தீப நிகண்டு * சாமிநாத கவிராயர் - பொதிகை நிகண்டு  * மண்டல புருடர் - சூடாமணி நிகண்டு  * திவாகர முனிவர் - திவாகரம் (சேந்தன் திவாகரம்)  * பிங்கல முனிவர் - பிங்கலந்தை(பிங்கல நிகண்டு)  * காங்கேயர் - உரிச்சொல் நிகண்டு  * இரேவண சித்தர் - அகராதி நிகண்டு 

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

* கந்தர் கலி வெண்பா  * மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் * நீதிநெறி விளக்கம்  * திருவாரூர் நான்மணிமாலை * முத்துக்குமார சுவாமி  பிள்ளைத்தமிழ் * சிதம்பர மும்மணிக் கோவை * மதுரைக் கலம்பகம் * சிதம்பர செய்யுட் கலம்பகம் * பண்டார மும்மணிக் கோவை * சகலகலா வல்லி மாலை * காசுக்  கலம்பகம்

சீவக சிந்தாமணியின் இலம்பகங்கள்

படம்
              சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். விருத்தப்பா என்னும் யாப்பு வகையில் அமைந்த தமிழின் முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்      சீவக சிந்தாமணியில் 13 இலம்பகங்கள் உள்ளன.  1. நாமகள் இலம்பகம் 2. மணமகள் இலம்பகம் 3. பூமகள் இலம்பகம் 4. முக்தி இலம்பகம் 5. கோவிந்தையார் இலம்பகம் 6. காந்தருவதத்தையார் இலம்பகம் 7. குணமாலையார் இலம்பகம் 8. பதுமையார் இலம்பகம்  9. கேமசரியார் இலம்பகம் 10. கனகமாலையார்  இலம்பகம் 11. விமலையார்  இலம்பகம் 12. சுரமஞ்சரியார்  இலம்பகம் 13. இலக்கணையார் 

மாற்றம் ஏமாற்றம்

படம்
 

முதுமொழிக்காஞ்சி பத்து அதிகாரங்கள்

படம்
        முதுமொழிக் காட்சி ஆசிரியர்  மதுரைக் கூடலூர்கிழார். 10 அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள்  உள்ளன.  பத்து அதிகாரங்கள்  1. சிறந்த பத்து 2. அறிவுப் பத்து 3. பழியாய் பத்து 4. துவ்வாப் பத்து 5. அல்ல பத்து 6. இல்லைப் பத்து 7. பொய்ப் பத்து 8. எளிய  பத்து 9. நல்கூர்ந்த பத்து 10. தண்டாப் பத்து

திருக்குறள் மொழிபெயர்த்தவர்கள்

படம்
  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் 1784.            கிண்டர்ஸ்லே 1812.             எஃப். டபிள்யூ .எல்லிஸ் 1886.             ஜி. யு. போப் 1916.            வ. வே. சு. ஐயர் 1919 .           கோ. வடிவேலு செட்டியார் 1927.            எம். எஸ். பூரணலிங்கம்                                       பிள்ளை 1937.           சி. இராஜகோபாலச்சாரி 1969.            கஸ்தூரி  சீனிவாசன்  லத்தீன் 1730.            வீரமாமுனிவர் பிரெஞ்சு  1848.              இ. ஏரியல் 1854              பி. ஜி. டெடுமாஸ்ட் ரஷ்யன் 1963.             யூரி இல்லாசவ் மலாய் 1964.             ஹஜி தக்கிர் பர்மீஷ் 1984.               சாமுவேல் எல். பெர்விக் ஸ்பானிஷ்   1968.              ஜி. அருள் ஜெர்மன் 1803 .             ஏ. எஃப். காமரர் சிங்களம் 1961.              மிக்கி அம்மையார் சமஸ்கிருதம்   1922 .             அப்பா தீட்சிதர்  1961 .             ஸ்ரீராம் தேசிகன் இந்தி 1952.              பி. டி. ஜைன் 1958.              சங்கரராஜீ நாயுடு 1964.            வேங்கட கிருஷ்ணன் கன்னடம் 1955.             எல். குண்டப்பா தெலுங்கு 1877               வைத்

வீறு கொண்டெழு மனமே! கவிதை

படம்
 வீறு கொண்டெழு மனமே!  நேற்றைய கவலையை எண்ணி இன்றைய அமைதியை இழந்து நாளைய வாழ்வைத் தொலைக்காமல் இருக்க வீறு கொண்டெழு மனமே! தோல்விக் கண்டு சலித்துக் கொள்ளாமல் வெறுமையை நினைக்காமல் வெற்றியை நெருங்க வீறு கொண்டெழு மனமே! நீ போகும் பாதை முட்களாகலாம் பழகும் சொந்தத்தால் சோகம் நேரலாம் தடைகளைத் தாண்டி தைரியமாக வாழ வீறு கொண்டெழு மனமே! உலகம் உன்னை கேலி பேசலாம் உழைக்கும் கரங்களில் வலிகள் கூடலாம்  ஊக்கம் கொண்டு நீ எழ வீறு கொண்டெழு மனமே! துயரம் கண்டு துவளாமல் துக்கம் என்று அஞ்சாமல் சாதிக்க துணிந்த மனிதனாய் வீறு கொண்டெழு மனமே! வெட்டிப் பேச்சைக்  கேளாமல் வீண் வேலை செய்யாமல் சரித்திரம் படைக்க வீறு கொண்டெழு மனமே! உன்னை புரிய நீ போதும் உன்னை அறிய  வெளி உலகம் வேண்டாம் உன்னுள் தேடு உண்மையைத் தெரிந்து கொள் வானம் உனக்கு வசப்படும் மனதிற்குள் குயிலிசைக்கும் ஆனந்தம் உன்னை வருட வாழ்க்கையை இன்னும் அழகாக்க வீறு கொண்டெழு மனமே! வீறு கொண்டெழு மனமே! வீறு கொண்டெழு மனமே!

பதினெண் கீழ்க்கணக்கு அக மற்றும் அற நூல்கள்

படம்
அகநூல்கள்    1. கார் நாற்பது   2. ஐந்திணை ஐம்பது  3. ஐந்திணை எழுபது  4. திணை மொழி ஐம்பது  5.திணைமாலை நூற்றைம்பது  6. கைந்நிலை    அற நூல்கள் 1. களவழி நாற்பது   2. நாலடியார்   3. இன்னா நாற்பது   4. இனியவை நாற்பது   5. திருக்குறள்   6. திரிகடுகம்   7. ஆசாரக்கோவை  8. பழமொழி   9. சிறுபஞ்சமூலம்  10. முதுமொழிக்காஞ்சி   11. ஏலாதி   12. நான்மணிக்கடிகை   13. இன்னிலை

விழிப்புணர்வு பற்றிய ஜென் கதை

குரு தன் சீடனுக்கு அனைத்து வகையான போர்க்கலைகளும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது சீடனுக்கு ஒரு எண்ணம், தான் பின்புறமாக இருந்து தாக்கினால் குரு என்ன செய்கிறார் என்று பார்க்க எண்ணினான். சீடன் பின்புறமாக வந்து கையை ஓங்கும் முன்னரே, காலை இடற வைத்தார் குரு. "நான் உங்களைத் தாக்க வருகிறேன் என்பது தங்களுக்கு எப்படித் தெரிந்தது? " என்றான் சீடன். " உன் மனம் கைகளைக் காட்டிலும் வேகமாக இயங்கியது " என்றார் குரு. விழிப்புணர்வை கூர்மையாக்கும் போது அடுத்தவர் எண்ணங்களை எளிதில் அறிய முடியும்.

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

1. சேமிப்புடன் குடும்பத்திற்கு பாதுகாப்பு 2. மிக குறைந்த பிரீமியம், அதிக போனஸ் 3. இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் பிரீமியம் செலுத்தும் வசதி 4. Online ல் பிரீமியம் செலுத்தும் வசதி 5. பிரீமியத்திற்கு வருமான வரி சலுகை உண்டு 6. முதிர்வு தொகைக்கு முழு வரி விலக்கு 7. ஒரு மாதம் மட்டும் பிரீமியம் செலுத்தப்பட்டு பாலிசி ஏற்றுக் கொள்ளப்பட்டு பாலிசிதாரர் இறக்க நேர்ந்தாலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு காப்பீட்டு தொகை பெறும் வசதி 8. கடன் வசதி 9. வாரிசு நியமனம் 10. காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் வசதி 11. பாலிசி தொகையோ அல்லது பிரீமியத் தொகையோ குறைத்துக் கொள்ளும் வசதி 12. தொலைந்த பாலிசி புத்தகம் அல்லது பாண்டை திரும்பப் பெறும் வசதி 13. 3 மாதம் முன் பணம் செலுத்தினால் 0.5 %, 6மாதத்திற்கு முன் பணம் செலுத்தினால் 1%, 1 வருடத்திற்கு முன் பணம் செலுத்தினால் 2% தள்ளுபடி உண்டு பாலிசி வகைகள் 1. Whole life assurance ( Gram suraksha) 2. Endowment assurance (Gram santhosh) 3. Convertible Whole life assurance ( Gram suvidha) 4. Anticipated Endowment assurance ( Gram sumangal) 5. Childr