விழிப்புணர்வு பற்றிய ஜென் கதை

குரு தன் சீடனுக்கு அனைத்து வகையான போர்க்கலைகளும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது சீடனுக்கு ஒரு எண்ணம், தான் பின்புறமாக இருந்து தாக்கினால் குரு என்ன செய்கிறார் என்று பார்க்க எண்ணினான். சீடன் பின்புறமாக வந்து கையை ஓங்கும் முன்னரே, காலை இடற வைத்தார் குரு. "நான் உங்களைத் தாக்க வருகிறேன் என்பது தங்களுக்கு எப்படித் தெரிந்தது? " என்றான் சீடன். " உன் மனம் கைகளைக் காட்டிலும் வேகமாக இயங்கியது " என்றார் குரு. விழிப்புணர்வை கூர்மையாக்கும் போது அடுத்தவர் எண்ணங்களை எளிதில் அறிய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை