இவ்வதிசயப் பெண்ணின் வாழ்க்கையைப் படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடும் என்பது உண்மை. ஹெலன் அமெரிக்காவில் உள்ள சிறிய நகர் ஒன்றில் பிறந்து, பெற்றோரின் முதல் குழந்தையாய் செல்ல குழந்தையாய் வளர்க்கப்பட்டார். ஹெலனுக்கு இரண்டு வயது வரும் வேளையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் பார்வை, கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்தார். அதன் பின்னர் சல்லிவன் என்ற ஆசிரியரின் துணைக் கொண்டு ஒவ்வொன்றையும் கற்க ஆரம்பித்தார். ஹெலன் கெல்லரை எட்டாவது அதிசயம் என்றே கூறலாம். வாழ்க்கையில் இருளைத் தவிர, சோகத்தைத் தவிர எதையும் அறியாத சிறுமி, துணிவு என்ற மருந்தைக் கொண்டு தன் நோயை விரட்டி, முயற்சி செய்து ஓரளவு பேசும் சக்தியை பெற்றார். தமது 24வது வயதில் முதுகலை பட்டம் பெற்றார். 1908ம் ஆண்டு 'நான் வாழும் உலகம் ' என்ற நூலை எழுதினார். தொடும் உணர்ச்சி மோப்பம் இவற்றைக் கொண்டே என் உலகம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் இருந்த பார்வை...