தன்னம்பிக்கையின் ஊற்று ஹெலன் கெல்லர்


  இவ்வதிசயப் பெண்ணின் வாழ்க்கையைப் படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடும் என்பது உண்மை. 

   ஹெலன் அமெரிக்காவில் உள்ள சிறிய நகர் ஒன்றில் பிறந்து, பெற்றோரின் முதல் குழந்தையாய் செல்ல குழந்தையாய் வளர்க்கப்பட்டார். 

    ஹெலனுக்கு இரண்டு வயது வரும் வேளையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் பார்வை,  கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்தார்.  அதன் பின்னர் சல்லிவன் என்ற ஆசிரியரின் துணைக் கொண்டு ஒவ்வொன்றையும் கற்க ஆரம்பித்தார். 

   ஹெலன் கெல்லரை எட்டாவது அதிசயம் என்றே கூறலாம். வாழ்க்கையில் இருளைத் தவிர, சோகத்தைத் தவிர எதையும் அறியாத சிறுமி, துணிவு என்ற மருந்தைக் கொண்டு தன் நோயை விரட்டி,  முயற்சி செய்து ஓரளவு பேசும் சக்தியை பெற்றார்.  தமது 24வது வயதில் முதுகலை பட்டம் பெற்றார். 

   1908ம் ஆண்டு 'நான் வாழும் உலகம் ' என்ற நூலை எழுதினார்.  தொடும் உணர்ச்சி மோப்பம் இவற்றைக் கொண்டே என் உலகம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

   உலகெங்கும் இருந்த பார்வையற்றோர் அமைப்புகளில் எல்லாம் ஏதோ ஒரு பொறுப்பு ஹெலனைத் தேடி வந்தது. அமெரிக்காவில் உள்ள பார்வையற்றோர் பொறுப்பின் குழு தலைவராக ஹெலன் நிர்ணயிக்கப்பட்டார். 

  அவர் சென்ற இடமெல்லாம் அவர் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூடியது. 

"என்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாது என்ற ஏமாற்றம் மறைய இந்த உலகத்தையே என்னைப் பார்க்க வைக்க நினைத்தேன்" என்றார் ஹெலன். 

  மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல் அவை நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு துன்பங்களில் இருந்து மீண்டு வந்த இந்த தேவதையின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கும். 

   எடுத்ததற்கெல்லாம் சலிப்பு, விரக்தி,  வெறுப்பு என்று வாழ்ந்து வரும் பலருக்கு இவரது வரலாறு எழுச்சியூட்டும் மருந்தாம். 

"மனதில் உறுதி வேண்டும் 

வாக்கினிலே இனிமை வேண்டும்" என்ற பாரதி கண்ட புதுமைப் பெண்ணை,  அதிசயப் பெண்ணை போற்றி மகிழ்வோம். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை