இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதம் தழைக்க

மனிதம் தழைக்க மனிதம் தழைக்க மானுடம் பழகு மனிதம் தழைப்பதே மானுடத்தின் வளர்ச்சி உண்மை நெறி காண வேண்டும் உண்மை வழி நடக்க வேண்டும் மனிதம் பெருக வேண்டும் உரிமைக்குரல் எழ வேண்டும் பெண்ணுரிமை காக்கப்பட வேண்டும் ஒரு மனிதனை பார்க்கும் போது மற்றொரு மனிதனின் மனதில் தோன்ற வேண்டியது நம்பிக்கை ஏனெனில் மானுட வளர்ச்சியின் தொடக்கம் அது

புவி பல்லுயிர் வாழ்வதற்கான இடம்

படம்
புவி பல்லுயிர் வாழும் இடம்      உடம்போடு உயிர் சேர்ந்த வாழ்க்கை என்பது பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதே ஆகும்.அதுபோலவே புவி என்பது உடம்போடு உயிர் சேர்வது போன்றது."பல்லுயிரோடு இணைந்து வாழாமல் செயற்கையை தேடிய மனிதன் அடைந்தது பெரும் நாசமே".        மனித வாழ்விற்கு உயிர் பன்மையமாவது மிக முக்கிய செல்வமாக உள்ளது.இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களமனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது.இயற்கையை ரசிப்பது என்பது நம் அனைவருக்கும் மிக பிடித்தமான ஒன்று. பல்லுயிர் பெருக்கம் என்பது புவியின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு சூழ்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் ஆகும்.பல+உயிர்=பல்லுயிர். இந்த பல உயிரினத்தில் தான் மனித இனமும் அடங்குகிறது.புவி என்பது பல உயிரிகள் வாழும் வீடு ஆகும்.எனவே  மனிதனைத் தனி உயிராக பார்க்காமல் பல்லுயிரோடு சேர்ந்தே பார்ப்போம்.பவி என்பது பல உயிர்கள் வாழும் இடம் ஆகும்.

Youth imitation - green india,clean india

Youth imitation -green india , clean india Introduction         More and more people are thinking about the green and clean india.People have understood that their responsibility about the natural environment.what is the solution means, youth take the problems and try to solve it.Youth should go green and clean india.You can plant a small tree but it grow to its proper heights only 10 or 15 years.So we will try to improve our country with green and clean. "The youth is the hope of our future".                                    -Jose Rizal. Green india        "Green is the prime colour of the world,and that from which its loveliness arises".      Very few members understand that the importance of green india or the environment . Our sources and the environment was well-maintained by our ancestors, so our responsibility also like that.We have no rights to destroy it . Youth imitate our ancestors how they were save the natural sources. People want more money a

மதிப்பெண் என்பது

மதிப்பெண் என்பது வாழ்வில் முன்னேற மதிப்பெண் தேவை ஆனால் தேர்வில் அல்ல ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் மதிப்பெண் எடுக்க வேண்டும் ஏனென்றால் அவள் தன் வாழ்க்கையை தன் பிள்ளைகளுக்கு என வாழ்கிறாள் ஒரு தந்தை தன் குடும்பத்திடம் மதிப்பெண் எடுக்க வேண்டும் ஏனென்றால் அவர் தான் குடும்பத்தலைவர் என்னும் பொறுப்பில் உள்ளவர் ஒரு குழந்தை இந்த சமூகத்திடம் மதிப்பெண் எடுக்க வேண்டும் அவன் தன் மதிப்பை தேர்வின் மதிப்பெண்ணால் உயர்த்த முடியாது வாழ்வில் எடுக்கும் நல்மதிப்பெண்ணால் மட்டுமே உயர்ந்த முடியும் மதிப்பெண்களே அளவுகோலானால் மனிதனின் மதிப்பு நசுக்கப்படும் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று மதிப்பும் மாறக் கூடியது மதிப்பெண்ணும் மாறக் கூடியது வாழ்வின் ஒரு பகுதி தான் மதிப்பெண்ணே தவிர வாழ்க்கையே மதிப்பெண் அல்ல

நூல்களே அறிவின் திறவுகோல்

நூல்களே அறிவின் திறவுகோல் நூல்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை.மக்களின் வாழ்க்கை முறை,நாகரிகம் இவற்றையும் முன்னோர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிய உதவுகிறது. நமக்கு தெரியாது நம் வயதிற்கு எட்டாத பல நிகழ்வுகளை நூல்கள் நமக்கு கற்றுத் தருகிறது. ஒவ்வொரு நூலும் மக்களுக்கு அறிவுரையையும் வாழ்வியலின் நெறிமுறையையும் உணர்த்தும்.மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் எவ்வாறு வாழ கூடாது என்பதை நூல்கள் மூலம் தெளிவாக அறியலாம்.ஒரு நல்ல மனிதன் சிறந்த புத்தகத்தின் மூலம் உருவாகிறான்.நூல்களே வெற்றியின் சிறப்பையும் தோல்வியினால் கிடைக்கும் அனுபவத்தையும் உணர்த்துகின்றன.வாழ்க்கை என்பது ஒரு  புத்தகம் அதில் ஒரு பக்கம் மட்டும் வாழ்க்கை அல்ல ஒவ்வொரு பக்கங்களானதே வாழ்க்கை. "புத்தகங்கள் இல்லை என்றால் சரித்திரம் இல்லை".தலை குனிந்து நீ புத்தகத்தைப் பார்த்தால் புத்தகம் உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைக்கும். நூல்கள் தான் கற்பனையை உருவாக்கும் கற்பனை அறிவைப் பெருக்க உதவும் அறிவு தான் உன்னை சிறந்த மனிதனாக உருவாக்குகிறது.

ஜகத்தினை மாற்றிடுவோம்

ஜகத்தினை மாற்றிடுவோம்     வாழ்வில் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.ஒரு வீட்டின் முன்னேற்றம் அந்த வீட்டுத்தலைவனின் நடத்தையினால் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு நாட்டின் முன்னேற்றம் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.அப்போது இந்த ஜகத்தின் வெற்றி ஒவ்வொரு நாட்டின்  முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'என்கிறார் பாரதி.ஆனால் தற்போது விவசாயிகளே உணவில்லாமல் துன்பப்படுகின்றனர்.இந்தியாவில் 2014ம் ஆண்டு 2115 விவசாயிகளும்,2015ம் ஆண்டு 2997விவசாயிகளும் இறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளவிவசாயிகளின் துன்பம் ஒரு பக்கம் என்றால் பெண்களுக்கு நடக்கும் கொடுமை மறுப்பக்கம்.இருப்பினும் பல தடைகளைத் தாண்டி இன்றும் பல.சாதனைப் பெண்மணிகள் உள்ளனர்.இருந்தும் இன்று வரை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லை. பெண்களுக்கு என பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் பெண்களின் சுதந்திரம் உறுதிசெய்யப்படாத ஒன்றாய் உள்ளது. "ஜகத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் நாட்டின் முன்னேற்றம் ஒரு வீட்டின் முன

என் வறண்ட காவிரி

என் வறண்ட காவிரி தலைக்காவிரியில் கையளவு உருவாகி பெங்களூர் வழியாக தமிழகம் புகுந்து ஒகேனக்கல்லில் ஆர்பரித்து விரிகுடாவில் சங்கமமாகும் காவிரி தாயே! நீயோ இந்தியாவிலுள்ள பெரிய ஆறுகளில் ஒருவள் உனக்கோ பல துணை ஆறுகள் உன்னால் தான் சோழநாடு செழிப்புற்றது எட்டுத்தொகையும் திருக்குறளும் உன் புகழ் பரப்பியது எங்கே சென்றாள் என் பொன்னி தாய் அவள் கொடுத்த பாதை மட்டுமுள்ளது அவள் எங்கே உன்னைப் பார்த்து வளர்ந்த நாங்கள் உன்னோடு விளையாடி மகிழ்ந்த நாங்கள் இப்போது உன்னைக் காணாமல் தவிக்கிறோம் வான் தந்த மழைநீரை தேக்க மறந்தோம் நித்தம் உன்னை எதிர்பார்த்து வாடினேன் நாளைய தலைமுறைக்கு எதை அளிக்க போகிறோம் நாளையை எப்படி சமாளிக்கப் போகிறோம் வந்த வழியை மறந்தோம் போகும் வழி அறியாமல் நின்றோம் வழி தெரியாமல் கையேந்தி நிற்கிறது என் தேசம் விடைதெரியாமல் கேள்விகளோடு வாழ்க்கை என் நெஞ்சம் என் வறண்ட காவிரியே!என்னைத் தேடி வா! தேசம் முழுவதும் செழிப்பு சேர்க்க வா!

கல்வி

கல்வி கல்வி என்னும் மூன்றெழுத்தினுள் கலை என்னும் இரண்டெழுத்து அடங்கும் கலைகள் சங்கமிக்கும் இடம் பள்ளி பள்ளி மூலம் கற்பிக்கப்படுவது கல்வி கல்வியினால் பிறப்பது தெளிவு கொடுக்கும் பல உயர்வு அறிவை புகட்டும் கல்வி வாழ்வின் பாதை காட்டும் கல்வி மாணவனை செதுக்கும் உளி கல்வி சோதனை கடந்து பல சாதனை படைக்க கற்றுக் கொடுப்பது கல்வி காலத்தால் அழியா கல்வி காலம் தாண்டி வாழும் கல்வி கல்வி கற்பிக்கும் ஆசானை உருவாக்குவது கல்வி எண்ணம் என்னும் ஏட்டில் -என் சிந்தனையை பதிவிட செய்தது கல்வி வண்ணம் தீட்டிய வரைபடத்தில் விழிப்புணர்வைக் கொடுக்க செய்தது கல்வி உள்ளம் என்னும் ஊற்றில் உண்மை கூற வைத்தது கல்வி கருணை என்னும் கருத்தின் வழியாக கல் நெஞ்சையும் உருக செய்தது கல்வி நட்பு என்னும் நம்பிக்கையைக் காண்பித்தது கல்வி அறியாமை என்னும் இருள் நீக்கி இன்பம் அளித்தது கல்வி வித்தாய் இருக்கும் மாணவனை மரமாய் உருவாக்கியது கல்வி தீண்டாமை என்னும் தீமையை நீக்கி அனைவரும் சமம் என உணர்த்தி சமத்துவம் காத்து வருவது கல்வி

சாலையில் ஒரு சோலை

படம்
சாலையில் ஒரு சோலை காலையில் ஒரு வேலை-அது கல்லூரி செல்வது கல்லூரிக்கு ஒரு பயணம்-அது பேருந்தில் செல்வது பேருந்தில் ஒரு அழகு-அது இயற்கையை இரசிப்பது இயற்கையில் ஒரு இனிமை-அது இன்பம் தருவது இன்பத்தில் ஒரு புதுமை-அது சோலைகள் தருவது சாலையில் சோலை-அது கடவுள் அளித்தது கடவுளின் இன்பம்-அது பசுமை காண்பது பசுமையின் இன்பம்-அது சுற்றுச்சூழல் காப்பது சுற்றுச்சூழலின் இன்பம்-அது சோலை காப்பது சாலையின் இன்பம்-அது சோலை காப்பது சாதனையின் அழகு சோதனையில் சந்திரனின் அழகு மாலையில் சாலையின் அழகு சோலையில்      சாலையில் ஒரு சோலை!

வாழ்க்கை ஒரு வரம் கவிதை

வாழ்க்கை ஒரு வரம் வானவில்லின் வாழ்க்கை வண்ணத்தின் வரத்தால் வண்ணத்தின் வாழ்க்கை பூக்களின் வரத்தால் பூக்களின் வாழ்க்கை கனியின் வரத்தால் கனியின் வாழ்க்கை சுவைப்பவர் வரத்தால் சுவைப்பவர் வாழ்க்கை சுவையின் வரத்தால் சுவையின் வாழ்க்கை இன்பத்தின் வரத்தால் இன்பத்தின் வாழ்க்கை சிரிப்பவர் வரத்தால் சிரிப்பவரின் வாழ்க்கை சிரிக்க வைப்பவரின் வரத்தால் சிரிக்க வைப்பவர் வாழ்க்கை சிந்தனையின் வரத்தால் சிந்தனையின் வாழ்க்கை அறிவாளியின் வரத்தால் அறிவாளியின் வாழ்க்கை சாதனையின் வரத்தால் சாதனையின் வாழ்க்கை சாதிப்பவர் வரத்தால் சாதிப்பவரின் வாழ்க்கை சரித்திரத்தின் வரத்தால் சரித்திரத்தின் வாழ்க்கை வெற்றியின் வரத்தால் வெற்றியின் வாழ்க்கை தோல்வியின் வரத்தால் தோல்வியின் வாழ்க்கை தோற்பவர் வரத்தால் தோற்பவர் வாழ்க்கை தன்னம்பிக்கையின் வரத்தால் தன்னம்பிக்கையின் வாழ்க்கை எண்ணத்தின் வரத்தால் எண்ணத்தின் வாழ்க்கை சிந்தனையின் வரத்தால் சிந்தனையின் வாழ்க்கை செயலின் வரத்தால் செயலின் வாழ்க்கை வாழ்க்கையின் வரத்தால் வாழ்க்கை என்பது வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல இறந்தும் தனது சாதனையால் வாழ்பவர்களவ

ஆணும் பெண்ணும் நிகரென கொள்வோம்

ஆணும் பெண்ணும் நிகரென கொள்வோம் ஆணைப் படைத்தவன் இறைவன் என்றால்   பெண்ணைப் படைத்தவன் ஆணா?-     இல்லை பெண்ணையும் இறைவன் தான்   படைத்தானா? அப்படி இறைவன் என்றால்-ஏன் பெண் மட்டும் ஆணுக்குக் கீழ் காரணம் என்னவோ? இறைவா ஆணுக்கு முடிவெடுக்கும் திறமை    உண்டென்றால் பெண்ணிற்கு இல்லையா? பெண்ணிற்கு மட்டும் தான் கற்புண்டா?   ஆணிற்கு இல்லையா? அவளுக்கும் விருப்பு வெறுப்பு     இருக்காதா? இல்லை இருக்கக் கூடாதா?-இந்த   ஏற்றத்தாழ்விற்குக் காரணம்     என்னவோ? காரணத்தையே அறிய விளைகிறது  நெஞ்சம் ஆணிற்கு உள்ள பலமானது   பெண்ணைக் காக்கவா?அழிக்கவா? கற்பு என்னும் மூன்றெழுத்தினுள்   அவளை அடக்குவது ஏன்? கற்பு என்னும் பெயரை உருவாக்கியவன்   அதை எதிர்பார்ப்பது பெண்ணிடம்  மட்டும் தானா? அது ஏன் இறைவா!ஏன்?    பெண்ணை மதிக்கும் சமுதாயம்   உருவாகுமா? உருவாகிக் கொண்டு தான் இருக்கிறது  என்றால் சிறுமிகளின் பாலியல் துன்புறுத்தலும்   இருக்கிறதல்லவா? இந்த அனைத்து கொடுமைகளும்   இல்லாமல் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்   இல்லாமல் ஆணும் பெண்ணும் நிகரென   கொள்வோம் சமுதாயத்தில் நிம்மதி காப்போம்

உன் வாழ்க்கை உன் கையில் கவிதை

படம்
வாழ்க்கை என்பது அழகானது-அதில்   நாம் சாதனை சிகரத்தைத் தொட       வாழ்த்துக்கள் முயற்சி என்னும் படிகட்டில் ஏற   முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் ஒரு அனுபவம் கற்றுத் தரும்   பாடத்தை ஒருமனதுடன் ஏற்றுக்கொள் தடைக்கல்லாக கருதாமல் படிக்கல்லாக   கருதி தன்னம்பிக்கையுடன் போராடு சிகரத்தை உயரம் எனக் கருதாமல் வாழ்வில்   சிகரம் தொட்டு சாதனை படை நமது சாதனை ஒவ்வொன்றும்    மற்றவர்களைச் சலிப்படையாமல் சாதிக்கவும் அடுத்து வரும் சந்ததிகளை வழிநடத்தும்   பாத சுவடுகளாகவும் இருக்க வேண்டும் அனுபவத்தைக் கற்றுத் தரும்    பள்ளியாகவும் அமைய வேண்டும் ஆற்றின் பாதையை   ஆறே தீர்மானிக்கும்-அதுபோல நீ செல்லும் பாதையை   உன்னால் மட்டுமே சிறப்பாக நிர்ணயிக்க     முடியும் முடியாது என்பது முயற்சிக்காதது மட்டுமே சரித்திரம் என்றும் சாதிப்பவர்களுக்கு மட்டுமே              உன் வாழ்க்கை              உன் கையில்!

மயக்கும் மாலைபொழுது

                                                                                                                                                               சந்திரனும் என்னைத் தேடும் அந்நேரம்-அப்பொழுது                                                       முல்லை மலரின் வாசம் இளம்பெண்ணைக் கவரும் வாசம்                                        இரைத்தேடும் குயில்கள் கூடு செல்லும் நேரம்                                                                  பள்ளிச் சென்ற மாணவர்கள் விளையாடித் திரியும் நேரம்                                            தூங்கிக் கிடந்த வௌவால் இரைத்தேட செல்லும் நேரம்                                                கண்ணைக் கவரும் காட்சிகண்டு நானும் மயங்கும் நேரம்                                            வார்த்தைகளால் இன்பம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் நானும்                                            சூரியன் மறையும் அந்நேரம் வானத்தின் வண்ணக்கோளம்