கல்வி

கல்வி
கல்வி என்னும் மூன்றெழுத்தினுள்
கலை என்னும் இரண்டெழுத்து அடங்கும்
கலைகள் சங்கமிக்கும் இடம் பள்ளி
பள்ளி மூலம் கற்பிக்கப்படுவது கல்வி
கல்வியினால் பிறப்பது தெளிவு
கொடுக்கும் பல உயர்வு
அறிவை புகட்டும் கல்வி
வாழ்வின் பாதை காட்டும் கல்வி
மாணவனை செதுக்கும் உளி கல்வி
சோதனை கடந்து பல சாதனை படைக்க
கற்றுக் கொடுப்பது கல்வி
காலத்தால் அழியா கல்வி
காலம் தாண்டி வாழும் கல்வி
கல்வி கற்பிக்கும் ஆசானை உருவாக்குவது கல்வி
எண்ணம் என்னும் ஏட்டில் -என்
சிந்தனையை பதிவிட செய்தது கல்வி
வண்ணம் தீட்டிய வரைபடத்தில்
விழிப்புணர்வைக் கொடுக்க செய்தது கல்வி
உள்ளம் என்னும் ஊற்றில்
உண்மை கூற வைத்தது கல்வி
கருணை என்னும் கருத்தின் வழியாக
கல் நெஞ்சையும் உருக செய்தது கல்வி
நட்பு என்னும் நம்பிக்கையைக்
காண்பித்தது கல்வி
அறியாமை என்னும் இருள் நீக்கி
இன்பம் அளித்தது கல்வி
வித்தாய் இருக்கும் மாணவனை
மரமாய் உருவாக்கியது கல்வி
தீண்டாமை என்னும் தீமையை நீக்கி
அனைவரும் சமம் என உணர்த்தி
சமத்துவம் காத்து வருவது கல்வி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை