உன் வாழ்க்கை உன் கையில் கவிதை

வாழ்க்கை என்பது அழகானது-அதில்
  நாம் சாதனை சிகரத்தைத் தொட       வாழ்த்துக்கள்
முயற்சி என்னும் படிகட்டில் ஏற
  முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்
ஒரு அனுபவம் கற்றுத் தரும்
  பாடத்தை ஒருமனதுடன் ஏற்றுக்கொள்
தடைக்கல்லாக கருதாமல் படிக்கல்லாக
  கருதி தன்னம்பிக்கையுடன் போராடு
சிகரத்தை உயரம் எனக் கருதாமல் வாழ்வில்
  சிகரம் தொட்டு சாதனை படை
நமது சாதனை ஒவ்வொன்றும் 
  மற்றவர்களைச் சலிப்படையாமல் சாதிக்கவும்
அடுத்து வரும் சந்ததிகளை வழிநடத்தும்
  பாத சுவடுகளாகவும் இருக்க வேண்டும்
அனுபவத்தைக் கற்றுத் தரும் 
  பள்ளியாகவும் அமைய வேண்டும்
ஆற்றின் பாதையை
  ஆறே தீர்மானிக்கும்-அதுபோல
நீ செல்லும் பாதையை
  உன்னால் மட்டுமே சிறப்பாக நிர்ணயிக்க   
 முடியும்
முடியாது என்பது முயற்சிக்காதது மட்டுமே
சரித்திரம் என்றும் சாதிப்பவர்களுக்கு மட்டுமே
             உன் வாழ்க்கை
             உன் கையில்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை