மதிப்பெண் என்பது

மதிப்பெண் என்பது
வாழ்வில் முன்னேற மதிப்பெண் தேவை
ஆனால் தேர்வில் அல்ல
ஒரு தாய் தன் பிள்ளைகளிடம்
மதிப்பெண் எடுக்க வேண்டும்
ஏனென்றால் அவள் தன் வாழ்க்கையை
தன் பிள்ளைகளுக்கு என வாழ்கிறாள்
ஒரு தந்தை தன் குடும்பத்திடம்
மதிப்பெண் எடுக்க வேண்டும்
ஏனென்றால் அவர் தான் குடும்பத்தலைவர் என்னும் பொறுப்பில் உள்ளவர்
ஒரு குழந்தை இந்த சமூகத்திடம்
மதிப்பெண் எடுக்க வேண்டும்
அவன் தன் மதிப்பை தேர்வின்
மதிப்பெண்ணால் உயர்த்த முடியாது
வாழ்வில் எடுக்கும் நல்மதிப்பெண்ணால்
மட்டுமே உயர்ந்த முடியும்
மதிப்பெண்களே அளவுகோலானால்
மனிதனின் மதிப்பு நசுக்கப்படும்
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று
மதிப்பும் மாறக் கூடியது
மதிப்பெண்ணும் மாறக் கூடியது
வாழ்வின் ஒரு பகுதி தான்
மதிப்பெண்ணே தவிர
வாழ்க்கையே மதிப்பெண் அல்ல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை